முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் முஸ்லிம் காங்கிரஸில் கறிவேப்பிலையாக
பாவிக்கப்பட்டாரா?
புத்திஜீவிகள்
கவலை
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.
அஷ்ரப் அவர்கள் கொழும்பு மாநகர மேயர் முஸம்மில்,
அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் நஸீர் ஆகியோர்களோடு முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் கொழும்பு வீட்டுக்குச் சென்று மன்சூர் அவர்களையும்
அவரது குடும்பத்தினரையும் சந்தித்தார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களும் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களும்
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள்.
அதன் பின்னர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முன்னாள் அமைச்சர்
மன்சூர் அவர்களைப் பார்த்து “காக்கா (நானா) உங்களின் அரசியல் கொள்கைதான் முற்றிலும்
சரி. எல்லா இனத்தவர்களையும் அனைத்துச் செல்கின்ற உங்களின் செயல்பாடுதான் தற்போது நாட்டிற்குத்
தேவை. அதனை நான் தற்போது உணர்ந்துவிட்டேன். அதன் நிமிர்த்தம் நான் தற்போது தேசிய ஐக்கிய
முன்னணி (NUA) எனும் கட்சியை ஆரம்பித்துள்ளேன். எங்களோடு நீங்களும் உங்கள் மகன் றஹ்மத்
மன்சூரும் இணைந்து கொள்ள வேண்டும். கட்சிக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
எங்களோடு நீங்கள் இருந்தால் அதுவே போதும். உங்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்துக்கு எப்பாடு
பட்டாவது உங்களை ஒரு பிரதிநிதியாக பாராளுமன்றம் அனுப்பி அதன் மூலம் நான் சந்தோஷப்படுவேன்”.
என்று கூறுகின்றார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளை மன்சூர் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்.
இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டு நாட்கள் கடந்த பின்னர்
2000.09.14 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில்.
. . . . . .
குழுக்களின் பிரதித் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
செயலாளர் நாயகம் ரவூப் ஹக்கிம் அவர்கள்,
கெளரவ பிரதி சபாநாயகர் அவர்களே! இன்னும் மகிழ்ச்சியான ஒரு விடயத்தை பேசிவிட்டு எனது
உரையை முடித்துக்கொள்கின்றேன். எமது தேசிய ஐக்கிய முன்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின்
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இணைந்து கொண்டுள்ளார் என்ற நற்செய்தியை இந்த சபைக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.
பாராளுமன்ற ஹன்ஸாட்
2000.09.14 பக்கம் 363
இவர் பாராளுமன்றத்தில் பேசிய இரண்டு நாட்களின் பின்னர்
2000.09.16
ஆம் திகதி சனிக்கிழமை காலை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஹெலிகொப்டர் விபத்தில்
மரணமானார். ( இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் )
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர், கட்சியில்
முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் எந்த வகையில் மதிக்கப்பட்டுள்ளார்? அவருக்கு கட்சியில்
உரிய இடம் வழங்கப்பட்டதா? குறைந்தது அவரின் அரசியல் அனுபவங்களையாவது கட்சியின் உயர்பீடம்
பெற்றுக் கொள்வதற்கு முற்சித்ததும் உண்டா? என கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் வினவுகின்றனர்.
மர்ஹும் அஷ்ரபினால் அன்பாக கட்சியில் இணைக்கப்பட்டு உரிய இடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டவரும்
தற்போதய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களால் இவரின் கட்சி இணைவை பாராளுமன்றத்தில் பெருமையாக
பேசப்பட்டவருமான முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் முஸ்லிம்
காங்கிரஸில் இதுவரையும் கறி வேப்பிலையாக பாவிக்கப்பட்டாரா? என புத்திஜீவிகள் கேள்வி
எழுப்புகின்றனர்.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் இறுதிக்கால ஆசைப்படி
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் கட்சியால் மதிக்கப்படல் வேண்டும். கட்சியில் அவருக்கும்
உரிய இடம் வழங்கப்படல் வேண்டும். அவருடைய தமிழ் முஸ்லிம் உறவுக்கான சேவைத் திறனுடைய
அனுவங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என சமுகத்திலுள்ள புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட உயர்பீடம் கவனத்தில் எடுக்குமா?
0 comments:
Post a Comment