பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்
பதவியை இராஜினாமா செய்தார்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.கே. க்சனிகா ஹிரிம்புரேகம ( Prof. SSMK Kshanika Hirimburegama) பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதத்தை உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜயசிங்கத்திடம் கையளித்திருப்பதை இராஜாங்க அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த பதவிக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில், அவர் இந்த பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான  பேராசிரியர் க்சனிகா ஹிரிமுரேகம,( Prof. SSMK Kshanika Hirimburegama) பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சகல பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி இன்று மேற்கொள்ளப்படவிருந்த ஒருநாள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top