ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்
10 பேர் பலி

அர்ஜென்டினாவில் சம்பவம்

அர்ஜென்டினாவின் போனஸ்அயர்ஸ் பகுதியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

பிரெஞ்சு நாட்டின் விளையாட்டு வீரர்கள் மூவர் வந்த ஹெலிகாப்டரும், மற்றொரு ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு ஹெலிகாப்டரில் வந்தவர்களும் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிப் படப்பிடிப்புக்காக பிரான்ஸ் ஒலிம்பிக் வீரர்கள் உள்பட 10 பேர் சென்ற இரு ஹெலிகாப்டர்கள் திங்கள்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
அந்த இரு ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆர்ஜென்டினாவின் லா ரியோஜா மாகாணத்திலுள்ள வில்லா கேஸ்டலி நகரில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து ஆர்ஜென்டினா உள்துறை அமைச்சர் சீஸர் ஆங்குலோ கூறியதாவது:
ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் பலத்த வெடிச்சப்தம் கேட்டது. எனவே அவை நடுவானில் மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார் அவர்.
உயிரிழந்தவர்களில் மூவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர்கள் ஆவர்.
அவர்களில் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை கேமிலீ முஃபட் (25), குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் வாஸ்டைன் (28), படகுப் போட்டி வீராங்கனை ஃபிளாரன்ஸ் ஆர்துட் ஆகியோர் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் கூறுகையில், ""எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களின் இந்தக் கொடூர மரணம் கடும் வேதனையளிக்கிறது'' என்றார்.
ஒலிம்பிக் வீரர்களைத் தவிர, தொலைக்காட்சி படக் குழுவினர் லாரன் பாஸ்னிக், லூஸி மேய்-டால்பி, ஒலோடியா கினார்டு, பிரைஸ் கில்பெர்ட், எட்வர்டு கில்லீஸ், ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமானிகள்
ஜுவான் கார்லோஸ் கேஸ்டிலோ, ராபர்டோ அபேட் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
கடுமையானச் சூழல்களில் உயிர்பிழைக்கும் சாகசத் தொடரான "டிராப்டு' (வான்வழியாக இறக்கிவிடப்பட்டோர்) என்ற நிகழ்ச்சிப் படப்பிடிப்புக்காக அவர்கள் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்தத் தொடரில் பங்கேற்கும் நட்சத்திரங்களில் ஒருவரான சில்வெய்ன் வில்டோர்டு படக் குழுவினரோடு செல்லாததால் அவர் விபத்தில் சிக்காமல் தப்பினார்.

விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில், ""என் நண்பர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ளேன். இதைக் குறித்துச் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை'' என்றார்


The three sports stars killed

Camille Muffat, Alexis Vastine and Florence ArthaudCamille Muffat, Alexis Vastine and Florence Arthaud were confirmed dead by President Hollande's office
Camille Muffat, 25, won three medals, including gold in the 400m freestyle in the 2012 London Olympics. She retired from competitive swimming in 2014.
Alexis Vastine, 28, won bronze at the 2008 Beijing Olympics in the light-welterweight category. He was narrowly beaten in the quarter-finals of the 2012 Games.
Florence Arthaud, 57, was a hugely accomplished sailor, winning the 1990 Route du Rhum, the prestigious solo Atlantic race. A serious car accident put her in a coma when she was 17.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top