பிரான்ஸ் அகழ்வாராய்ச்சியின்
போது
200க்கும் மேற்பட்ட
எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
பிரான்ஸின்
தலைநகர் பாரீஸில்
உள்ள மோனோபிரிக்ஸ்
என்ற
பல்பொருள் அங்காடியில், கட்டிடத்தின் திருத்த பணிகள்
நடைபெற்ற
போது 200க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து
பல்பொருள் அங்காடியின்
மேலாளர், தேசிய அகழ்வாராய்ச்சி
நிறுவனத்தின் தடுப்பு பிரிவினருக்கு
(INRAP) தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த
எலும்புக்கூடுகள் பற்றி அகழ்வராய்ச்சி நிறுவனம்
ஆராய்ச்சி மேற்கொண்டு
வருகிறது.
இதுகுறித்து
ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த
பல்பொருள் அங்காடி இருக்கும்
இடம், 11ம்
நூற்றாண்டில் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை
புதைக்கும் இடமாக இருந்தது என்றும், நோயின்
தாக்கம்
அல்லது பசிக்கொடுமையினால் இவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
இந்த
இடத்தை மேலும்
தோண்ட ஏராளமான
எலும்புக்கூடுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்
தெரிவித்தனர். மேலும் இந்த எலும்புக்கூடுகளைக் கொண்டு
ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள்
கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment