மரங்கொத்தி
பறவை முதுகில்
சவாரி செய்த மரநாய்!
கிழக்கு
லண்டனில் சமீபத்தில்
நடந்த சுவாரஸ்யமான
சம்பவம் இது.
மார்ட்டின் லீ மே; பொழுதுபோக்கு போட்டோகிராபர்.
மனைவியுடன் ஹார்ன் சர்ச் கன்ட்ரி பூங்காவில்
நடந்து சென்று
கொண்டிருந்தார். அப்போது ஏதோ வினோத சத்தம்
கேட்ட அவர்
துணுக்குற்று நோக்கிய போது வானத்தில் மரங்கொத்தி
பறவை முதுகில்
குட்டி மரநாய்
சவாரி செய்வது
தெரிந்தது. வியப்பின் உச்சிக்கே சென்ற அவர்
எடுத்தார் கமராவை;
படங்களை எடுத்து
தள்ளினார்.
அவசரமாக
பறந்து தரையிறங்கிய
மரங்கொத்தி, அந்த பெண் மரநாயை இறக்கி
விட பட்டபாட்டையும்
அவர் கமராவில்
அடக்காமல் இல்லை. பிபிசி
சேனல் இதை
வெளியிட்டு அவரை பேட்டி கண்டது. ஆனாலும்,
வானில் பறக்கும்
படம் மட்டும்
தான் ஒரிஜனல்.
மற்றதெல்லாம் அலாவுதீன் போல கற்பனை ‘ஒட்டுவேலை’
தான் என்று
பேஸ்புக், ட்விட்டரில்
பலரும் கிண்டலடித்துள்ளனர்.
மரங்கொத்தி மீது மனிதர்கள் கூட சவாரி
செய்வது போல
எல்லாம் படங்களை
அள்ளியும் விட்டுள்ளனர்
சிலர்.
‘நான் எடுத்தது எல்லாம் உண்மையான படங்கள்’
என்கிறார் லீ
மே. இந்த
படங்களை 7,000 பேர் ரீ ட்விட் செய்துள்ளனர்
என்றால் பார்த்து
கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment