கல்முனை ஸாஹிறா
தேசிய கல்லூரிக்கு
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உதவி
Former Minister Al-Haj.A.R.Munsoor, Ashley de silva (chief executive officer) and sidath fernando (manager development ) |
அகில்
இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கல்முனை ஸாஹிறா
தேசிய பாடசாலைக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒரு தொகை கிரிக்கெட் உபகரணங்களை
அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
முன்னாள்
வர்த்த, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
நவீன் திஸநாயக்கவிடமும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளிடமும் விடுத்த
வேண்டுகோளுக்கமைய இவ்விளையாட்டு உபகரணங்கள்
இத் தேசிய பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்விளையாட்டு
உபகரணங்கள் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை நிர்வாகிகளிடம் கொழும்பில் வைத்து கையளிக்கப்பட்டதாக
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தெரிவித்தார்.
இதேவேளை,
மேற்படி தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியினரை சர்வதேச மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளச்
செய்வதற்காகப் போட்டிகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபை பயிற்றுநராக
சுஜீவ் குணரட்ன எனும் பயிற்றுநரின் சேவையையும் முன்னாள் அமைச்சர் மன்சூரின் வேண்டுகோளுக்கமைய
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கியுள்ளது.
இப்பயிற்றுநரின்
சேவையை கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலைகளான கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை,
கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி, மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயம் என்பனவற்றுக்கும்
வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மன்சூர் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment