தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்..
தர்மம் மறுபடி வெல்லும்

- .எச்.சித்தீக் காரியப்பர்

பாண்டவர்கள் தர்மத்தின் வழி நின்று கிருஷ்ணர் துணை கொண்டு கௌரவர்களை வீழ்த்திய வரலாறுதானே மகாபாரதம்.?
துரியோதனின் தூண்டுதலின் பேரில் துர்வாச முனிவர் ஒரு புயலை கிளப்பிவிட்டு சென்றிருந்தார். சாப்பிட்டு விட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்து வைத்துவிட வேண்டும். மறுபடியும் அடுத்த வேளைக்குத்தான் அது உணவு தரும். இது தெரிந்து வேண்டுமென்றே துர்வாச முனிவரை உணவு நேரத்திற்கு பிறகு இவர்களிடம் அனுப்பி வைத்தான் துரியோதனன். நல்ல வேளையாக கிருஷ்ணர் தலையிட்டு ஒரு திருவிளையாடல் நிகழ்த்தி துர்வாசரை ஓடவைத்தார்.
நேற்று கிழக்கு மாகாண சபையைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தற்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டனர்.அதேவேளை, அவர்களில் சிலர் உடனடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரான இரா. சம்பந்தன் ஐயாவைச் சந்தித்து தாங்கள் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகவும் ஆட்சி அமைக்க உரிமை கோருமாறும் வலியுறுத்தியாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் சாணயக்கியமும் எதிர்வு கூறலும் நீண்டகால அரசியல் அனுபவ முதிர்ச்சியும் கொண்ட சம்பந்தன் ஐயா அவர்கள் இவர்களுக்கு தெரிவித்த முக்கிய விடயம் என்ன என்பது இன்று வரை இரகசியமாக இருப்பது போன்று தொடர்ந்தும் இருந்து போகட்டும். ஆனால் அவரைச் சந்தித்த குழுவினர் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இன்று புதிய கிழக்கு மாகாண சபை அமைச்சரவை சத்தியப் பிரமாணஞ் செய்து கொண்டதன் மூலம் சம்பந்தன் ஐயாவை சந்தித்து சம்பந்தம் பேசியவர்கள் தங்கள் சுயநல அரசியல் வேட்கையில் படுதோல்வி அடைந்து விட்டனர் என்பது மட்டும் நிச்சயம். அவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இவர்கள் நினைத்துக் கொண்டார்கள் சம்பந்தன் ஐயாவை வளைந்து பிடித்து ஆட்சியமைத்து அமைச்சுப் பொறுப்பினை பெறலாம் என்று.. ஆனால், அந்த அரசியல் முதிர்ச்சி மலையிடம் இவர்களது பாசாங்கு அரசியல் எவ்வாறுதான் எடுபடும்?
எது எப்டியிருப்பினும் இவர்களைத் தூண்டி விட்ட துரியோதன் யார்சம்பந்தன் ஐயாவைச் சந்தித்தவர்களில் ஒருவராக காணப்பட்ட அந்த துர்வாச முனிவர் யார்ஆனால் இவர்களைத துரத்திய கிருஷ்ணராக சம்பந்தன் ஐயாவையும் அமைச்சர் ஹக்கீமையும் நினைத்து புகழ்ந்து மகிழ்ச்சியடைகிறேன்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top