எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முபாரக்
அவரின் 2 மகன்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
ஊழல்
வழக்கில் எகிப்து
முன்னாள் ஜனாதிபதி முபாரக் அவரின் 2 மகன்களுக்கு தலா
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து
நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை தீர்ப்பு அளித்து
உள்ளது.
எகிப்து
நாட்டில் ஹோஸ்னி
முபாரக்கின் இரும்புக்கர ஆட்சி 30 ஆண்டு காலம்
நடைபெற்றது. 2011–ம் ஆண்டு அவரது ஆட்சி
கவிழ்க்கப்பட்டது. பின்னர் அவர்
மீதும், அவரது
மகன்கள் மீதும்
ஊழல் வழக்குகள்
பாய்ந்தன. 87 வயதாகும் முபாரக்கும், அவரது மகன்களும்
சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் முபாரக்,
அவரது மகன்கள்
கமால், ஆலா
ஆகியோர் மீது
அரசு பணம்
பல மில்லியன் டொலர்களை முறைகேடாக பயன்படுத்திய
வழக்கு விசாரணையில்
நேற்று தீர்ப்பு
கூறப்பட்டது. இதில் முபாரக்குக்கும், அவரின் 2 மகன்களுக்கும்
தலா 3 ஆண்டுகள்
சிறை தண்டனையும்,
சுமார் 1அஐ மில்லியன் டொலரை அரசுக்கு திரும்ப
செலுத்த வேண்டும்
என்றும் நீதிபதி
ஹசன் ஹசானின்
உத்தரவிட்டார்.
ஆர்ப்பாட்டம்
நடத்தியவர்களை கொன்ற வழக்கில் முபாரக் உட்பட 8 பேருக்கு
தலா 20 ஆண்டுகள்
சிறை தண்டனை
விதித்து ஏற்கனவே
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.