பொது இடங்களில்
முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிய
காங்கோவில் தடை
பொது
இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் முகத்திரை (பர்தா) அணிந்து செல்ல காங்கோ
அரசு தடை விதித்துள்ளது. அதேபோல வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இரவு நேரத்தை பள்ளிவாசல்களில்
செலவழிப்பதையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
மத்திய
ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ஏற்பட்ட கலவரம்
காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் காங்கோவில் உள்ள மசூதிகளில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், தீவரவாத செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்
ஒரு பகுதியாகவே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காங்கோ அரசு விளக்கம்
அளித்துள்ளது.
இது
தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், மதசார்பற்ற நாடான காங்கோ அனைத்து மதத்தையும்
சமமாக மதிக்கிறது. இருப்பினும், சிலர் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக முகத்திரையை
தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே முகத்தை மறைக்கும் வகையில் பொது இடங்களில் செல்ல தடை
விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல்,
மசூதிகளில் இரவு தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி பேசிய அவர், மசூதிகள் வழிபாட்டு
நோக்கங்களுக்காக உள்ளது என்று தூங்குவதற்கான இடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கோ
நாட்டில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான முஸ்லீம்களே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பர்தா மற்றும் முழுமையாக
முகத்தை மறைக்கும் உடைகளுக்கு தடை விதித்த
முதல் நடாக காங்கோ இருக்கும் என்று கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment