அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

9 பேர் பலி (படங்கள்)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வாகோ நகரில் உணவு விடுதி ஒன்றில் பைக் ஓட்டி குழுக்களிடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
 வாகோ நகரில் உள்ள ட்வின் பீக்ஸ் ரெஸ்ட்டாரண்ட்க்கு உணவு விடுதி வழக்கம் போல் நேற்றிரவும் பரபரப்பாக இருந்தது. அப்போது திடீரென உணவு விடுதிக்குள் இருந்த 3 பைக் ரேசிங் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அங்கிருந்து சண்டையிட்டபடி டெக்சாஸ் மார்க்கெட் வணிக வளாகத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு வந்து துப்பாக்கி, கத்தி, செயின் என்று தங்கள் கையில் இருந்த ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
மோதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் ஒருவர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வழியில் இறந்ததாகவும் பொலிஸ் அதிகாரி பாட்ரிக் ஸ்வான்டன் தெரிவிததுள்ளார். 18 பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
சில பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்து கொள்ள இரண்டு பைக் ஓட்டி குழுவினர் முயன்றதாகவும் அதில் பிரச்சனை ஏற்பட்டு, பின்னர் அது சண்டையாக மாறி இருக்கிறது என்று தெரிகிறது. பேண்டிடோஸ் மற்றும் கோசாக்ஸ் என்ற இரு குழுவினர் தான் இந்த சண்டையில் ஈடுபட்டதாக பொலிஸ் கூறியிருக்கிறது.

சுமார் 100 முறை அவர்கள் சுட்டுக்கொண்டதாகவும் அந்த இடத்தில் போர் இடம்பெற்றது போல் காணப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top