ஐபிஎல் சீசன் 8
சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது

மும்பை இந்தியன்ஸ்

(படங்கள் இணைப்பு)

ஐபிஎல் சீசன் 8ன் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன்  கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை  வென்றது.
முன்னதாக நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை  தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20  ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை குவித்தது.  இதனையடுத்து 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை  இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. மும்பை  அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்  பட்டத்தை தட்டிச் சென்றது.
8 அணிகள் பங்கேற்ற 8-வது .பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம் கடந்த மாதம் 8ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது. லீக், பிளே-ஆப் சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறியது. மும்பை, சென்னை அணிகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி .பி.எல். போட்டியில் மகுடம் சூடுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2013-ம் ஆண்டும் பட்டத்தை வென்றிருந்தது.
வெற்றி பெற்ற மும்பை அணிக்கு இந்திய ரூபாவில் ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த சென்னை அணிக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top