முஸ்லிம்கள் நடுக்கடலில்
தத்தளிக்கும் பரிதாப வாழ்க்கை!
ஆள்கடத்தும் தரகர்களின் அராஜகம்!!
ஆயிரக்கணக்கான
வங்கதேசிகளும் ரோஹின்ஜா அகதிகளும் மிகப் பெரிய
சரக்குக் கப்பல்களில்
அந்தமான் கடல்
பகுதியில், ஆள்கடத்தும் இடைத் தரகர்களால் பிணையாகப்
பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் கப்பல்களில்
பயணம் செய்து
பிறகு தப்பி
வந்தவர்களிடம் நேரடியாகப் பேசியதில் இந்தக் கொடூரம்
தெரியவந்துள்ளது. இந்தத் தரகர்களுக்கு மிகப் பெரிய
மாஃபியா கும்பல்
பின்புலமாக இருந்து செயல்படுகிறது.
தாய்லாந்து,
மலேசிய நாடுகளைச்
சேர்ந்த அதிகாரிகள்
ஆள்கடத்தும் தரகர்கள் மீது கடும் நடவடிக்கையை
எடுக்க முற்பட்டதை
அடுத்து, அவர்களை
எந்த நாட்டிலும்
இறக்கி விடாமல்
கடலிலேயே பிணையாகப்
பிடித்து வைத்துள்ளனர்.
அகதிகளை விட்டு
அவர்களுடைய உறவினர்களுக்கு கைபேசி மூலம் பேசச்
செய்து அதிகத்
தொகையைக் கேட்கிறார்கள்.
பேசிக்கொண்டிருக்கும்போதே அகதிகளைக் கடுமையாக
அடித்து அவர்கள்
அலறுவதை உறவினர்கள்
கேட்கச் செய்கிறார்கள்.
பணம் கிடைத்தால்
அவர்களைக் கரைக்குக்
கொண்டுபோய் விடுகிறார்கள். நோயாலோ, சாப்பாடு பற்றாமலோ,
அடிப்பதாலோ அகதிகள் இறந்தால் அவர்களைக் கப்பலிலிருந்து
தூக்கிக் கடலில்
வீசிவிடுகிறார்கள் என்ற திடுக்கிடும்
தகவல்களை அவர்கள்
தெரிவிக்கிறார்கள். அத்துடன் பெண்களையும்
சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்குகிறார்கள்.
கரையிலும்
பல முகாம்களை
அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக இடைத்தரகர்கள்
நடத்துகிறார்கள். அவற்றில் இறப்பவர்களைப் பெரிய குழி
தோண்டிப் புதைத்துவிடுகிறார்கள்.
தெற்கு தாய்லாந்திலும்
மலேசியாவிலும் இப்படி அகதிகள் புதைக்கப்பட்ட இரகசியக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில்
ஒரே குழியில்
ஏராளமான 100 க்கு மேற்பட்ட சடலங்கள்கூடப் புதைக்கப்பட்டிருக்கின்றன.
வேலை
தேடியும் உயிரைக்
காப்பாற்றிக் கொள்ளவும் வெளிநாடுகளுக்குச்
செல்லும் மக்கள்,
அதற்கு உதவுவதாகக்
கூறும் இடைத்
தரகர்களை நம்புகிறார்கள்.
அவர்கள் முதலில்
200 டாலர்கள் கொடுத்தால் போதும் என்கிறார்கள். பிறகு,
கப்பலில் செல்லும்போது
வேறு இடைத்
தரகர்கள் அங்கு
அடியாட்களுடன் வருகிறார்கள். அவர்கள் அதிகத் தொகை
கேட்டு அகதிகளைத்
துன்புறுத்துகிறார்கள்.
அகதிகள்
மீது அக்கறை
கொண்டு அவர்களை
அரவணைக்கும் ‘ஆங்கன்’ என்ற அமைப்பைச் சேர்ந்த
கிறிஸ் லிவா
சொல்லும் தகவல்கள்
நம்மை அதிரவைக்கின்றன.
“இடைத்தரகர்களால் இந்தத் தொழிலை விட முடியாது.
எனவே, கப்பல்களில்
உள்ளவர்களைக் கரைக்கு அழைத்துவராமல் கடலிலேயே சிறைவைத்து
மிரட்டிப் பணம்
பறிக்கிறார்கள். பெப்ரவரிக்குப்
பிறகு, மேலும்
சில ஆயிரம்
அகதிகள் கப்பல்களில்
சேர்ந்துள்ளனர். தாய்லாந்து முகாமில் இறந்தவர்களின் எண்ணிக்கையைப்
போல பல
மடங்கு கடலில்
இறந்திருக்கிறார்கள்” என்கிறார்.
ரோஹின்ஜா
இளைஞர் ஒருவர் கூறும்போது
தெரிவித்திருப்பதாவது: “கால்நடைகளை
ஏற்றிச்செல்லும் மியான்மர் படகில் ஏறி வெளிநாட்டில்
அடைக்கலம் கேட்கச்
சென்றேன். கடலில்
9 நாட்கள் இருந்ததற்குப்
பிறகு தாய்லாந்து
கடற்கரைக்கு அருகில் மிகப் பெரிய சரக்குக்
கப்பலில் ஏற்றப்பட்டோம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதில் மூன்றில்
ஒரு பகுதியினர்
பெண்கள். அதில்
14 நாட்கள் இருந்தோம். நாங்கள் அந்தக் கப்பலில்
ஏற்றப்பட்ட உடனேயே ஆட்களைக் கடத்தும் 3 பேர்
கையில் கைபேசியுடன்
அந்தக் கப்பலில்
ஏறினார்கள். யாருக்கெல்லாம் உறவினர்களின்
தொலைபேசி எண்கள்
தெரியும் என்று
கேட்டார்கள். ஒவ்வொருவராக அழைத்து, உறவினரிடம் பேசி
ஆயிரக் கணக்கில்
பணத்தைக் கொடுத்தால்தான்
விடுவிப்போம் என்று சொல்லச் சொன்னார்கள். அப்படிப்
பேசிக்கொண்டிருந்தபோதே அடித்து அலற
வைத்தார்கள். யாருடைய எண்ணும் தெரியாது, நெருங்கிய
உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறியவர்களைக்
கடுமையாக அடித்தார்கள்.
கப்பல் இன்ஜினின்
சங்கிலியை பிளாஸ்டிக்கால்
மூடி, அதைக்
கொண்டு அடித்தார்கள்.
அவர்கள் அடித்த
பிளாஸ்டிக் தடிக்குள்ளும் இரும்பு போன்ற கனமான
எதையோ மறைத்து
வைத்திருந்தார்கள். ஒவ்வொரு அடியும்
எலும்பு உடையும்
அளவுக்கு இருந்தது.
நான் அங்கிருந்து
புறப்படுவதற்கு முன்னால் இப்படி அடித்ததிலேயே 3 பேருக்கு
பக்கவாதம் ஏற்பட்டு
சுருண்டு விழுந்தார்கள்.
ஒருவர் மரணித்து விழுந்தார். அவருடைய சடலத்தை
உடனே கப்பலின்
மேல் தளத்திலிருந்து
கடலுக்குள் தூக்கி வீசிவிட்டார்கள்.”
தாய்லாந்தின்
வடக்குப் பகுதியைச்
சேர்ந்த ஒருவரும்
தொலைபேசி மூலம்
பேசியபோது இதே
போன்ற சம்பவங்களை
விவரித்தார். “நான் அந்தப் படகில் பெப்ரவரி முதல்
3 மாதங்கள் தங்கியிருந்தேன். அவர்களால்
அழைத்துவரப்பட்ட அகதிகளைத் தினமும் அழைத்து அடிப்பார்கள்.
சிலரை ஒரு
நாளைக்கு 2 அல்லது 3 முறைகூட அடித்திருக்கிறார்கள். அந்தப் படகில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள்
இருந்தனர்” என்றார்.
“எண்ணெய்
ஏற்றிச்செல்லும் கப்பலை, அகதிகளைத் தங்க வைக்கும்
கடல் முகாமாக
இடைத்தரகர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில்
2,000 பேர் இருந்தனர். சுமார் 2 மாதங்களுக்குக் கடலிலேயே
அது இங்கும்
அங்கும் போய்க்
கொண்டிருந்தது. கப்பலை வாடகைக்கு எடுத்து, அகதிகளை
மிரட்டிப் பணம்
சம்பாதிக்கும் அளவுக்கு இடைத்தரகர்களுக்கு
அதில் ஆதாயம்
கிடைத்து வந்தது”
என்கிறார் தாய்லாந்து
பொலிஸ்
படையின் ஆலோசகர்
அப்துல் கலாம்.
சேனல்-4 நியூஸ்
தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி யளித்துள்ளார். இந்தக் கதைகள் முடிவில்லாமல்
தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
-'தி கார்டியன்'
0 comments:
Post a Comment