நூற்றாண்டு குத்துச்சண்டை போட்டி
அமெரிக்க வீரர் புளோய்ட் மேவெதர் சாம்பியன் பட்டம் வென்றார்
நூற்றாண்டு
குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரர் புளோய்ட்
மேவெதர் மேன்னி பாகியாயோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம்
வென்றார்,.
இந்த
நூற்றாண்டின் பெரும் குத்துச்சண்டை என்று வர்ணிக்கப்பட்ட
போட்டி, லாஸ்
வேகஸ் நகரில்
இன்று நடைபெற்றது.
போட்டியில் அமெரிக்க வீரர் புளோய்ட் மேவெதர்
மற்றும் பிலிப்பைன்ஸ்
வீரர் மேன்னி
பாகியாயோ மோதினர்.
போட்டியில் அமெரிக்காவின் புளோய்ட் மேவெதர் சாம்பியன்
பட்டம் வென்றார்.
13 சுற்றுகள்
கொண்ட இப்போட்டியில்
118-110, 116-112 மற்றும் 116-112 என்ற புள்ளிகள்
கணக்கில் பிலிப்பைன்சின்
மேன்னி பாகியாயோவை
மேவெதர் வீழ்த்தினார்.
சுற்றுவாரியாக
இருவரும் பெற்ற
புள்ளிகள் விவரம்;
முதல்
சுற்று - 10-9
2 வது சுற்று - 10-9 (20-18)
3வது
சுற்று - 10-9 (30-27)
4 வது
சுற்று 9-10 (39-37)
5 வது
சுற்று - 10-9(49-46)
6 வது
சுற்று - 9-10 (58-56)
7 வது சுற்று - 9-10(67-66)
8 வது சுற்று - 10-9(77-75),
9 வது சுற்று - 10-9(87-84)
10 வது சுற்று - 10-9(97-93)
11 வது
சுற்று - 10-9(107-102)
12வதுசுற்று-9-10(116-112) ஆகிய புள்ளிகள் கணக்கில் மேவெதர்
முன்னிலையில் இருந்தார்.
இதையடுத்து
இப்போட்டிக்கான மூன்று நடுவர்களும் தங்களது மதிப்புகளை
வழங்கினர். மேவெதர் 118-110, 116-112, 116-112 ஆகிய
புள்ளிகள் பெற்று
அபார வெற்றியடைந்தார்.
38 வயதான
மேவெதரின் உடல்
எடை 66.2 கிலோ
என்றும் 36 வயதான பக்கியாவின் உடல் எடை
65.7 கிலோ என்றும்
இன்றைய எடை
பார்க்கும் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. தொழில்முறை குத்துச்சண்டையில்
48 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டவரான
38 வயதான மேவெதர்,
இந்த போட்டியிலும்
வெற்றி பெற்று
நூற்றாண்டு குத்துச்சண்டை வீரர் என்பதை உறுதிசெய்தார்.
பிலிப்பைன்ஸ்
வீரர் மேன்னி
பாகியாயோ, 57 வெற்றிகளை குவித்தவர். 6 தோல்விகளையும் சந்தித்தவர்.
இருபோட்டிகள் டிராவில் முடிந்தது. பாகியாயோ பேசுகையில்
“புள்ளியை பார்க்கும்போது
நான் மிகவும்
அதிர்ச்சி அடைந்தேன்,
அவர் என்னை
குத்தியதைவிட நான் அவரை அதிகமுறை குத்தினேன்
என்று நினைக்கிறேன்,”
என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment