நேபாள நிலநடுக்கம்:
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 மாதக் குழந்தை
குடும்பத்துடன் இணைந்தது
நேபாளத்தில்
கடந்த சனிக்கிழமை
நேரிட்ட நிலநடுக்கத்தால்,
இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 22 மணி நேரத்துக்குப்
பிறகு மீட்கப்பட்ட
4 மாதப் பெண்
குழந்தை அதன்
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பக்தபூர்
பகுதியில் இடிபாடுகளுக்குள்
இருப்போரை மீட்கும்
பணி நடந்து
கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் இருந்து
வந்த குழந்தையின்
அழுகுரலைக் கேட்டு, அங்கு மீட்புப் பணி
துரிதப்படுத்தப்பட்டது.
பிறந்த
4 மாதமே ஆன
அந்த பெண்
குழந்தையை வீரர்கள்
உயிரோடு மீட்டபோது
அங்கு ஒரு
உணர்வுப் போராட்டமே
நடந்தது. உடனடியாக
குழந்தையைத் தூக்கி அதனை சமாதானம் செய்து
அழுகையை நிறுத்தி
மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த
குழந்தையை இழந்து
சோகத்தில் வாடிக்
கொண்டிருந்த ஷ்யாம் அவால் - ரேஸ்மிலா தம்பதியினரைக்
கண்டுபிடித்த மீட்புக் குழுவினர், அவர்களிடம் குழந்தையை
ஒப்படைத்தனர்.
பெற்றோர்
ஆனந்தக் கண்ணீருடன்
குழந்தையை பெற்றுக்
கொள்ள, பெற்றோரைப்
பார்த்த களிப்பில்
குழந்தை சிரித்தபடி
பெற்றோரிடம் தாவியது.
0 comments:
Post a Comment