ஓய்வு பெறவேண்டிய நிலையில்  
தேர்தல்கள் ஆணையாளர்


தேர்தல் ஆணையாளர் ஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதியுடன் 60 வயதை பூர்த்தி செய்வதோடு, அவரது பதவியில் இருந்தும் ஓய்வு பெறவேண்டிய நிலையில் உள்ளார்.
அவர் தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்க விரும்பினால் முன்னரே அதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். எனினும், அவர் இதுவரை அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்தெரிவித்துள்ள.  
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமையச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்படவுள்ளது. சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையாளரின் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கீழ் வரவுள்ளது.   சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப் படவுள்ளதாலேயே தேர்தல் ஆணையாளர் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கவில்லை எனத் தேர்தல் ஆணையாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய தேர்தல் ஆணையாளர் ஹிந்த தேசப்பிரிய தனது பதவிக் காலத்தை 65 வயது வரை நீடித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top