புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட
3 நீரிழிவு மாத்திரைகள்
விஷத்தன்மை வாய்ந்தவை
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
எச்சரிக்கை
புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 3 நீரிழிவு மாத்திரைகள்
விஷத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவர்களில் டைப்–2
நீரிழிவு நோயாளிகள்
கனாக்ளிபுளோசின்,
டயாக்ளிபுளோசின்
மற்றும் எம்யாக் புளோசின் ஆகிய 3 மாத்திரைகளை
எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால்
அவை விஷத்தன்மை
வாய்ந்தது. இரத்தத்தில்
ஆசிட் (அமிலம்)
அளவை அதிகப்படுத்திவிடும்.
அதனால் மிக
மோசமான எதிர்
விளைவுகளை ஏற்படுத்தும்
என அமெரிக்காவின்
உணவு மற்றும்
மருந்து நிர்வாகம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த
3 மாத்திரைகளும் இரத்தத்தில்
சர்க்கரை அளவை
குறைத்து சிறுநீரகம்
வழியாக சிறு
நீரில் வெளியேற்றி
வருகிறது. ஆனால்
மற்ற மாத்திரைகள்
சிறு நீரகம்
வழியாக சர்க்கரையை
வெளியேற்றும் தன்மை வாய்ந்தவை அல்ல. அவை
கணையம் வழியாக
வெளியேற்றுகிறது. இருந்தும் அந்த மாத்திரைகளை அமெரிக்க
உணவு மற்றும்
மருந்து நிர்வாகம்
தடை செய்யவில்லை.
மாறாக இந்த
மாத்திரைகளை சாப்பிடும் நோயாளிகளின் உடலில் அமில
தேக்கத்தின் அளவை மதிப்பீடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.
மேற்கண்ட
3 மாத்திரைகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில்
சிரமம், வாந்தி,
அடிவயிற்றில் வலி, குழப்பமான நிலை, தூக்கமின்மை
மற்றும் உடலில்
வழக்கத்துக்கு மாறாக ஏற்படும் மாற்றங்கள் போன்ற
விளைவுகள் ஏற்படும்.
இவற்றையும் கண்காணிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
கடந்த
வாரம் இந்த
எச்சரிக்கை வெளியிடப்பட்டது. மேலும் டாக்டர்கள் அறிவுரை
இன்றி நீரிழிவு
நோயாளிகள் மருந்து
மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என வற்புறுத்தப்பட்டுள்ளது.
விஷத்தன்மை வாய்ந்தது என அமெரிக்காவால் எச்சரிக்கப்பட்டுள்ள
கனக்ளி
புளோசின்,
டயாக்ளி
புளோசின்
என்ற 2 மாத்திரைகள்
சமீபத்தில் தான் இந்தியாவில் வெளியிடப்பட்டன. அவற்றை
நீரிழிவு நோயாளிகள்
சாப்பிட்டு வருகின்றனர்.
அதனால்
ஏற்படும் எதிர்
விளைவுகள் குறித்து
இதுவரை எந்த
புகாரும் வரவில்லை.
எனவே அந்த
மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.
அமெரிக்கா
எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு
வருவதாக நீரிழிவு
நோய் நிபுணர்
டாக்டர் அனுப்மிஸ்ரா
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment