கூலிங் கிளாஸ் அணிந்தபடி இந்தியப் பிரதமரை வரவேற்ற
மாவட்ட கலெக்டர் ஒருவருக்கு நோட்டீஸ்

இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்ட கலெக்டர் அமித் கட்டாரியாவுக்கு ந்த மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 9ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டபோது பஸ்தார் மாவட்டம் சென்ற பிரதமரை வரவேற்ற மாவட்ட கலெக்டர் அமித் கட்டாரியா, முறையான உடைகளை அணியாமலும், கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டே பிரதமருக்கு கை கொடுத்து வரவேற்றதாகவும் சத்தீஸ்கர் மாநில அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், “பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் அன்று பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். ஆனால், நீங்கள் முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதோடு, கூலிங் கிளாஸ் அணிந்தபடியே அவரை வரவேற்றுள்ளீர்கள்.

அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம்என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top