அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு
மர்ஹூம் முஸ்தபா புலமைப்பரிசில் நிகழ்வுகள்

நாடு தழுவிய ரீதியில் பல கிளைகளை கொண்டு இயங்கும் சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் சாய்ந்தமருது கிளையில் கணணி கல்வியை தொடர இருக்கும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சாய்ந்தமருது கிளை நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சின் சர்வதேச விவகார பணிப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சுமார் ஒரு தசாப்தமாக இலங்கையில் சிறப்பாக இயங்கிவரும் இந்த கேம்பஸ் கடந்த காலங்களிலும் இது போன்ற  புலமைப்பரிசில்களை வழங்கிவருகிறது. மர்ஹூம் முஸ்தபா புலமைப்பரிசில் எனும் இந்த புலமைப்பரிசில் திட்டதினுடாக இதுவரை 5000 க்கும் மேற்பட்டவர்கள் முற்றிலும் இலவசமாக கல்விகற்றதுடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல உயர்பதவிகள் வகிப்பது குறிப்பிட தக்க ஒன்றாகும்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கிளை நிர்வாகிகளும்,விரிவுரையாளர்களான முஹம்மத் ஆரிப், முபாரக் முஸ்தபா, சஹ்பி இஸ்மாயில், முகம்மது நௌபிக், தெகில் அகமட் ஆகியோரும்  அதிகளவிலாளான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அன்வர் எம் முஸ்தபா எதிர்வரும் காலங்களில் எமது நாட்டில் இருக்கும் சகல இளம் சந்ததியினரையும் சர்வதேச மாணவர்களுக்கு இணையாக ஆங்கில,கணனி  கல்வியில்  எமது தேசத்து மாணவர்களையும் முன்னேற்ற தானும் தான் முகாமைத்துவம் செய்யும் சிம்ஸ் கேம்பஸ் கல்விநிலையமும் பாடுபடும் என்றும் இந்த பிரதேசத்தில் கல்வியையும் தாண்டி எமது மக்கள்  முகம் கொடுக்கும் பல இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தான்  குரல் கொடுத்து வருவதுபோல தொடர்ந்தும் குரல் கொடுக்க  தயாராக இருப்பதாகவும் அதற்காக பல இன்னல்களை தான் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.. 

செய்தியும் படமும்: நூர்











0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top