டில்லியில் கோலாகல விழா
62வது
தேசிய திரைப்பட
விருதுகள் டில்லியில் நேற்று நடைபெற்ற
கண்கவர் விழாவில்
வழங்கப்பட்டது. பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகர்
விருது உட்பட தமிழ்
படங்கள் மொத்தம்
8 விருதுகளை பெற்றன. இந்திய ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி இந்த
விருதுகளை வழங்கி
கெளரவித்தார்.
இந்திய
அளவில் சினிமா
துறைக்கான தேசிய
விருதை மத்திய
அரசு ஒவ்வொரு
வருடமும் வழங்கி
வருகிறது. சிறந்தப்
படம், சிறந்த
நடிகர், நடிகை, இயக்கம்,
ஒளிப்பதிவு என பல்வேறு பிரிவுகளில் விருதுகள்
வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு
ஜனவரி 1-ம் திகதி முதல் டிசம்பர் 31 வரை வெளியான
திரைப்படங்களுக்கான விருதுகள் டில்லியில் நேற்று நடந்த
விழாவில் வழங்கப்பட்டது.
விருதுகள்:
சிறந்த நடிகருக்கான
விருது ‘நானு அவனல்ல அவளு’ என்ற கன்னடப்
படத்தில் நடித்த
விஜய்க்கு வழங்கப்பட்டது.
‘குயின்’ படத்தில்
சிறப்பாக நடித்ததற்காக, கங்கனா ரனாவத் சிறந்த
நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே
2010-ம் ஆண்டு
‘பேஷன்’ படத்தில்
நடித்ததற்காக சிறந்த துணை
நடிகை விருதைப்
பெற்றிருந்தார்.
தமிழுக்கு
எட்டு விருதுகள்
கிடைத்துள்ளன. பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)
சிறந்த துணை
நடிகராகவும், விவேக் ஹர்சன் (ஜிகிர்தண்டா) சிறந்த
எடிட்டராகவும், ‘சைவம்‘ படத்தில் இடம்பெற்ற ‘அழகே
அழகே’
பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியர்
விருதுக்கு நா.முத்துக்குமாரும் இந்தப் பாடலை
பாடிய உத்ரா
உன்னி கிருஷ்ணன்
சிறந்த பாடகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
சிறுவர்களுக்கான படமாக, மணிகண்டன் இயக்கிய ‘காக்கா
முட்டை’யும்,
அதில் நடித்த
விக்னேஷ், ரமேஷ்
சிறந்த குழந்தை
நட்சத்திரமாகவும் தேர்வாகி
உள்ளனர். தமிழில்
சிறந்த படமாக, ‘குற்றம் கடிதல்’ தேர்வாகி உள்ளது.
யுடிவி தனஞ்செயன்
எழுதிய ‘பிரைட் ஆஃப் தமிழ் சினிமா’ சிறந்த சினிமா
நூலுக்கான விருதை
பெற்றுள்ளது. இந்த, 62-வது தேசிய திரைப்பட
விருதுகளின் தேர்வுக் குழுவுக்கு இயக்குனர் பாரதிராஜா
தலைவராக
இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் வென்ற திரைப்பட ஆளுமைகளின் முழுமையான பட்டியல்:
சிறந்த திரைப்படம்: கோர்ட் (மராத்தி, ஹிந்தி, குஜராத்தி & ஆங்கிலம்)
ரசிகர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை வழங்கிய பிரபலமான திரைப்படம் : மேரி கோம்
சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான இந்திரா காந்தி இயக்குனர் விருது : ’ஆஷா’ படத்திற்காக
Jaoar Majhe
சிறப்பு நடுவர் விருது: Khwada (மராத்தி)
சிறந்த இயக்கம்: ஸ்ரீஜித் முகர்ஜி, Chotushkone (பெங்காலி)
சிறந்த நடிகை: கங்கனா ரனாவத், Queen (ஹிந்தி)
சிறந்த நடிகர்: விஜய் Nanu
Avanalla Avalu (கன்னடம்)
சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா (தமிழ்)
சிறந்த துணை நடிகை: Baljinder Kaur for Pagdi
The Honour (Haryanavi)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: காக்கா முட்டை (தமிழ்)
சிறந்த பெண் பின்னணிப் பாடகர்: உத்ரா உன்னிகிருஷ்ணன், அழகு, சைவம் (தமிழ்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: Dolly Ahluwalia, ஹைதர் (இந்தி)
சிறந்த ஒப்பனை கலைஞர்: நங்கராஜூ மற்றும் ராஜு, Nanu
Avanalla Avalu (கன்னடம்)
சிறந்த ஒளிப்பதிவு: Chotushkone (பெங்காலி)
சிறந்த படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன், ஜிகர்தண்டா(தமிழ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: Aparna Raina for
Nachom - IA Kumpasar (Konkani)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் (அசல்): ஸ்ரீஜித் முகர்ஜி, Chotushkone (பெங்காலி)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் (தழுவியது): Joshy Mangalath for Ottal (Malayalam)
சிறந்த வசனம்: விஷால் பரத்வாஜ், ஹைதர் (ஹிந்தி)
சிறந்த பாடல்: நா.முத்துக்குமார், அழகு, சைவம் (தமிழ்)
சிறந்த இசை ’பாடல்கள்’ : ஹைதர்
சிறந்த இசை ’பின்னணி’:
Nineteen Eighty Three (மலையாளம்)
Best Audiography - Location Sound Recordist: Mahaveer Sabbanwal for Khwada
(Marathi)
Best Audiography - Sound Designer: Anish John for Asha Jaoar Majhe
(Bengali)
Best Audiography - Re-recordist of the final mixed track: Anirban Sengupta
& Dipankar Chaki for Nirbashito (Bengali)
சிறந்த நடன அமைப்பு: சுதேஷ் பிஸ்மில், ஹைதர்(ஹிந்தி)
சிறந்த அஸ்ஸாமி திரைப்படம்: Othello
சிறந்த பெங்காலி படம்: Nirbashito
சிறந்த இந்தி திரைப்படம்: Queen
சிறந்த ரப்பா திரைப்படம்: Orong
சிறந்த ஹர்யான்வி திரைப்படம்: Pagdi The Honour
சிறந்த பஞ்சாபி திரைப்படம்: Punjab 1984
சிறந்த தமிழ் திரைப்படம்: குற்றம் கடிதல்
சிறந்த தெலுங்கு திரைப்படம்: Chandamama Kathalu
சிறந்த மலையாளத் திரைப்படம்: Ain
சிறந்த மராத்தி மொழி திரைப்படம்: Killa
சிறந்த ஒடிய திரைப்படம்: Aadim Vichar
சிறந்த கன்னடத் திரைப்படம்: Harivu
சிறந்த கொங்கனி திரைப்படம்: IA Kumpasar
Special Mention: Killa (Marathi), Bhootnath Returns (Hindi), Ain
(Malayalam), Nachom - IA Kumpasar (Konkani)
சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திரைப்படம்: Ottaal (மலையாளம்)
சிறந்த கல்வி திரைப்படம்: Komal &
Behind the Glass Wall
சிறந்த காணல்/சாகச படம்: Life Force - India's Western Ghats
சிறந்த துப்பறியும் படம்: Phum Shang
சிறந்த அனிமேஷன் படம்: Sound of Joy
சிறந்த குறுகிய புனைகதை திரைப்படம்: Mitraa
சமூக விஷயங்களில் சிறந்த திரைப்படம்: Chotoder Chobi
சிறந்த குழந்தைகள் படம்: காக்கா முட்டை (தமிழ்) மற்றும்
Elizabeth Ekadashi (மராத்தி)
சிறந்த விமர்சகர்: Tanul Thakur
சிறந்த சினிமா புத்தகம்: Silent Cinema:
(1895-1930)
“தாதா சாகேப் பால்கே விருது”: சசி கபூர்
0 comments:
Post a Comment