கல்முனை மாநகர சபையில்
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முக்கிய
கூட்டம்!
கல்முனைப் பிராந்தியத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
நகர
அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின்
மேலதிக செயலாளர்
பொறியியலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்
கல்முனைப் பிராந்தியத்தின்
நீண்ட காலப்
பிரச்சினையாக இருந்து வருகின்ற வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கான
பாரிய வேலைத்
திட்டம் குறித்தும்
அதற்காக காரைதீவு
தொடக்கம் கரைவாகு
ஊடான கிட்டங்கி
வாய்க்கால் விஸ்தரிப்பு மற்றும் காணி நிரப்புதல்
உள்ளிட்ட விடயங்கள்
தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இதில்
நகர அபிவிருத்தி,
நீர் வழங்கல்,
வடிகாலமைப்பு அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்
எம்.எச்.எம்.முயினுதீன் உட்பட
நகர அபிவிருத்தி
அதிகார சபை,
காணி மீட்புக்
கூட்டுத்தாபனம், நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை
என்பவற்றின் உயர் அதிகாரிகளும் துறைசார் நிபுணர்களும்
கல்முனை பிரதேச
செயலாளர் எம்.எச்.எம்.கனி, சாய்ந்தமருது
பிரதேச செயலாளர்
ஏ.எல்.எம்.சலீம்,
உட்பட கல்முனையிலுள்ள
திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment