இறகுகளுடன் ஜோடியாக வானில் தோன்றும்
மனித உருவங்கள்
(வீடியோ இணைப்பு)
இந்தியாவில் இரவு
நேரத்தில் மனித
வடிவில் வித்தியாசமான
உருவங்கள் ஜோடியாக
வானத்தில் பறப்பதாக
தகவல் பரவியுள்ளது.
ஆந்திர
மாநிலம் நெல்லூர்
மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார்
பள்ளி, சுந்தரய்யா
காலனி, டைலர்ஸ்
காலனி, கடமானு
பல்லி, பவுர்யா
காலனி உள்ளிட்ட
பகுதிகள் உள்ளன.
இந்த
பகுதிகளில் கடந்த 1 வாரமாக இரவு 8 மணி
முதல் நள்ளிரவு
1 மணி வரை
மனித வடிவில்
வித்தியாசமான உருவங்கள் பறவைகள் போன்ற இறக்கையுடன்
ஜோடி ஜோடியாக
வானத்தில் பறப்பதாக
தகவல் பரவியுள்ளது.
இந்த
உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறகுகள் வெண்மை
நிறத்தில் காணப்படுகின்றன.
கால்கள் மனிதர்களுக்கு
இருப்பது போல
நீளமாக உள்ளன.
இந்த உருவங்கள்
பூமியை நோக்கி
பறந்து வருவதாகவும்
பின்னர் மறைந்துவிடுவதாகவும்
அப்பகுதி மக்கள்
தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த உருவங்கள்
கீச் கீச்
என்ற ஒலியுடன்
சப்தம் இடுவதாகவும்
கூறுகின்றனர்.
இவைகள்
நாரை அல்லது
வேறு ஏதாவது
பறவையாக இருக்கலாம்
எனவும், அல்லது
வேற்று கிரகத்தை
சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இது
தொடர்பான வீடியோ
ஒன்றும் இணையத்தில்
வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி
மக்கள் அச்சம்
அடைந்து இரவு
7 மணிக்கே வீட்டின்
ஜன்னல், கதவுகளை
அடைத்துக் கொள்கிறார்கள் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
https://youtu.be/4QXNRyV8AtM
0 comments:
Post a Comment