ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி கைது
நுகர்வோர்
மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்யப்பட்ட
முன்னாள் அமைச்சர், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று காலை பொலிஸ் நிதி மோசடி பிரிவில்,
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பணம்
கொடுக்காமல் லங்கா சதொசவில் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்தமை
தொடர்பில் வாக்குமூலம் வழங்க நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு சென்றிருந்தபோதே
அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி
குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த வாக்குமூலத்தை அடுத்து முன்னாள் அமைச்சர்
ஜோன்ஸ்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment