பர்மாவில் ஆயிரக்கணக்கில்
கொன்று குவிக்கப்படும்முஸ்லிம்கள்
(படங்கள் இணைப்பு)
பர்மாவில் வாழும் முஸ்லிம்களை முற்றிலுமாக ஒழித்து விட்டு புத்த மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று அரசின் துணையுடன் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு மிகப்பெரிய இனப்படுகொலையே நடந்து வருகிறது.
கடந்த 10 நாட்களாக பர்மாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்,
பர்மாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீண்டும் பங்களாதேஷுக்கு செல்ல வேண்டும் என்று அந்நாட்டிலுள்ள பயங்கரவாதிகளின் ஒரே முழக்கமாகும்.
நாங்கள் 5 தலைமுறைகளாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக பர்மாவில் தான் வாழ்வதாகவும், நாங்கள் பங்களாதேஷிலிருந்து ஊடுருவி வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலமாகும்.
பர்மாவில் வாழக்கூடிய முஸ்லிம்களை முற்றிலும் ஒழித்துவிட்டால் 100 சதவீதமும் பெளத்தர்கள் வாழக்கூடிய நாடாக பர்மாவை ஆக்கி விடலாம் என்பது அந்நாட்டு பயங்கரவாதிகளின் கணக்காகும்.
இதனால் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு முஸ்லிம்கள் நரவேட்டை ஆடப்படுகிரார்கள்.
உயிருக்கு அஞ்சி நடுங்கிய 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பர்மாவிலிருந்து வெளியேறி துருக்கி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் தற்காலிக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் பர்மாவில் நடத்தப்படும் நரவேட்டை முடிவுக்கு வரவில்லை, கேட்பதற்கு நாதியற்ற ஒரே சமுதாயமாக அந்நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயம் தவிக்கிறது.
யார் யார் பிரச்சினைக்கோ கொடி பிடித்து கோஷம் எழுப்பிய முஸ்லிம் சமுதாயம் மௌனம் காக்கிறது,
உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருந்தும் அனைத்து நாடுகளும் வாய் மூடி மௌனிகளாய் நிற்கிறது.
ஐநா சபை சரியான தீர்வை எடுக்கும் என்று முஸ்லிம் நாடுகள் அமைதி காக்கிறது, முஸ்லிம் நாடுகள் பார்த்துக்கொள்ளும் என்று முஸ்லிம் அமைப்புகள் மௌனம் காக்கிறது.
யார் யார் பிரச்சினைக்கோ பொங்கி எழுந்த சமுதாயம் தன் சமுதாயத்தை மீட்க இடியாய் புறப்படுவது எப்போது ?
பர்மாவில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்காக. ஒவ்வோரு பர்ளு தொழுகைக்கு பிறகும் அல்லாஹ் விடம் துஆ பிராரத்தனை செய்வோம்.
விழித்திடு முஸ்லிம்களே விழித்திடு.
முஸ்லிம் சமூகமே உனக்கு உணர்வு இல்லையா?
ஏன் இன்னும் கோளைத்தணம்!!..உறங்காதே!! விழித்திடு!!
உன் சகோதரன் கொல்லப்படுகிறான்!
உன் சகோதரி கற்பழிக்கப்படுகிறாள்!
உன் தாய் கொல்லப்படுகிறாள்!
எழுந்திடு தோளா!
புறப்படவோம் நம் உம்மத்தை காக்க!

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.