இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில்
எம்.பி.யான 20 வயது மாணவி
இங்கிலாந்து
நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சியின்
(எஸ்.என்.பி) சார்பில்
போட்டியிட்ட, 20 வயது மாணவி மெய்ரி
பிளாக்
எம்பியாக தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
பெய்ஸ்லி
தொகுதியில் களமிறங்கிய பிளாக், தன்னை எதிர்த்து
போட்டியிட்ட லேபர் கட்சியின் டக்ளஸ் அலெக்சாண்டரை(47)
விட, 5000 வாக்குகளுக்கும்
அதிகமாக பெற்று,
வெற்றி பெற்றார்.
1667ம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்து
தேர்தல் வரலாற்றில்,
மிகவும் இளம்
வயதில் எம்பியாக
தேர்வு செய்யப்பட்டவர்
மெய்ரி
பிளாக்
என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு பின் பிளாக் பேசுகையில், “சாதாரண
அடித்தட்டு மக்களின் நிலையை மேம்படுத்த நான்
பாடுபடுவேன். மக்களை தொடர்பு கொள்வதில் உள்ள
கடுமை தன்மையை
நீக்கி, அரசுக்கும்
மக்களுக்கும் இடையே சுமூக உறவை ஏற்படுத்துவேன்.
வெற்றி பெற்றிருப்பது,
பெரும் மகிழ்ச்சியை
அளிக்கிறது.
அடுத்தது
என்னவாக ஆகப்
போகிறீர்கள் என்று என்னிடம் பலரும் கேட்கின்றனர்”
என்றார். கிளாஸ்கோ
பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு இறுதித்
தேர்வை பிளாக்
எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1667ம் ஆண்டில்
13 வயது கிறிஸ்டோபர் மான்ங்
என்ற சிறுவன்,
எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போதும் மிகவும்
இளைய வயதில்
எம்.பி.
என்ற பெருமை
மான்ங்குக்கே உள்ளது. அதன்பிறகு பலர் இளம்
வயதில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மிக சமீபத்தில்
சார்லஸ்
கென்னடி
என்பவர் 23 வயதில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 348 ஆண்டுகளுக்குப் பிறகு
மிகவும் குறைந்த
வயது எம்.பி. என்ற
பெருமையை தற்போது
மெய்ரி பிளாக்
பெறுகிறார்.
0 comments:
Post a Comment