ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை:
கீழ் நீதிமன்ற
தீர்ப்பு தள்ளுபடி
அதிமுக
பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு
மீது இன்று
தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா உள்ளிட்ட
4 பேரும் வீடுதலை
செய்யப்பட்டார்கள்.
சொத்து
குவிப்பு வழக்கில்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100
கோடி அபராதமும்
விதித்து பெங்களூரு
தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்
திகதி
தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில்
அவரது தோழி
சசிகலா, சுதாகரன்,
இளவரசி ஆகியோருக்கு
தலா 4 ஆண்டுகள்
சிறை தண்டனையும்,
தலா ரூ.10
கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா
சிறையில் அடைக்கப்பட்ட
அவர்களை, பின்னர்
உச்சநீதிமன்றம் ஜாமீனில்
விடுதலை செய்தது.
தனிக்கோர்ட்டின்
தீர்ப்பை எதிர்த்து
அவர்கள் தாக்கல்
செய்த மேல்முறையீட்டு
மனுவை, உச்சநீதிமன்றத்தின்
உத்தரவின் பேரில்
கர்நாடக உயர்நீதிமன்ற
நீதிபதி குமாரசாமி
விசாரித்தார். ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்ற மூத்த
வக்கீல் நாகேஸ்வரராவ்,
சசிகலா சார்பில்
கேரள உயர்நீதிமன்ற
முன்னாள் நீதிபதி
பசந்த்குமார், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர்
சார்பில் சென்னை
உயர் நீதிமன்றா
முன்னாள் நீதிபதி
சுதந்திரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கடந்த
மார்ச் 11-ந்
திகதி
இறுதி விசாரணை
முடிவடைந்ததை தொடர்ந்து திகதி குறிப்பிடப்படாமல்
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே
மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் அரசு வக்கீல்
பவானிசிங்கை நீக்க வேண்டும் என்றும், வழக்கில்
தன்னை 3-வது
நபராக சேர்க்க
வேண்டும் என்றும்
கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன்
சார்பில் உச்சநீதிமன்றத்தில்
மனு தாக்கல்
செய்யப்பட்டது.
அந்த
மனுவை விசாரித்து
பவானி சிங்கின்
நியமனத்தை ரத்து
செய்த 3 நீதிபதிகள்
அடங்கிய உச்சநீதிமன்ற
அமர்வு, மேல்முறையீட்டு
வழக்கில் எழுத்துப்பூர்வமான
வாதத்தை தாக்கல்
செய்ய அன்பழகன்
மற்றும் கர்நாடக
அரசுக்கு அனுமதி
வழங்கியது. அத்துடன் மே மாதம் 12-ந்
திகதிக்குள்
மேல் முறையீட்டு
மனு மீது
தீர்ப்பு வழங்கும்படி
கர்நாடக உயர்நீதிமன்றம் கட்டளையிட்ட
உச்சநீதிமன்றம் அதுவரை
ஜெயலலிதா உள்ளிட்டோரின்
ஜாமீனையும் நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து க.அன்பழகன் சார்பில்
80 பக்கங்களிலும், கர்நாடக அரசின்
சார்பில் 18 பக்கங்களிலும் எழுத்துபூர்வ
வாதம் தாக்கல்
செய்யப்பட்டது. இதையடுத்து மே 11ம்
திகதி
தீர்ப்பு வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின்
மேல்முறையீட்டு மனு மீது இன்று
(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தனி நீதிபதி
குமாரசாமி உயர்நீதிமன்றத்தின்
14-ம் எண்
அறையில் தீர்ப்பு
வழங்கினார். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை
செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment