சம்மாந்துறை ஓசட்
சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில்
மன்னார் முசலிப் பிரதேச
மக்களுக்காக
கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டப் பேரணி
மன்னார்
முசலிப் பிரதேசங்களிலிருந்து
1990ஆம் ஆண்டு
வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களில்
மீள்குடியேற்றுமாறும் அவர்களுக்கு அடிப்படை
வசதிகளை செய்து
கொடுக்குமாறும் கோரி நேற்று 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர்
சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டப்
பேரணி ஒன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை
மக்கள் சார்பில்
சம்மாந்துறை ஓசட் சமூக நல அமைப்பின்
ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.
” முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை நிறுத்து”, மறிச்சுக்கட்டி முஸ்லிம்களது
மீள்குடியேற்றத்தை தடுக்காதே”, அரசே வட புல
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அநீதி இழைக்காதே”, வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாகவுள்ள இனவாத சக்திகளையும்,
போலிப்பிரச்சாரங்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்” போன்ற வாசகங்கள்
அடங்கிய சுலோகங்கள்
தாங்கி மக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சம்மாந்துறை மக்கள் சார்பில்
சம்மாந்துறை பிரதேச செயலகக் கணக்காளர் எம்.
மஹ்ருபிடம் சம்மாந்துறை ஓசட் சமூக நல
அமைப்பின் அமைப்பாளரும் தலைவருமான ஏ.சி.எம் சஹீல் அவர்களால் ஜனாதிபதிக்கு
சமர்ப்பிக்கவென தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment