இலங்கை
அரசின் எண்ணற்ற பணிகள் குறித்து
அமெரிக்கா பாராட்டு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசு மேற்கொண்டு
வரும், அமைதி
நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
அமெரிக்க
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இலங்கைக்கு
நேற்று வந்தார்.
அவரை, வெளிநாட்டு விவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான
குழு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றது.
இதன்
பின்னர், ஜான்
கெர்ரியும், அமைச்சர்
மங்கள சமரவீரவும்
பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகள், இலங்கையில்
நடந்த மனித
உரிமை மீறல்கள்
தொடர்பாக ஐநா விசாரணை,
தமிழர் பகுதியில்
மீள் குடியேற்றம்
செய்தல், அவர்களுடைய
நிலங்களை திரும்ப
ஒப்படைத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில்,
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அரசு
மேற்கொண்டு வரும் பணிகளையும், அமைதியை நிலை
நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும், கெர்ரியுடம்
அமைச்சர் மங்கள
சமரவீர விளக்கினார். இதன் பின்னர்
இருவரும் கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கெர்ரி பேசியதாவது:
இலங்கை அரசுக்கு
பல்வேறு பிரச்னைகள்
இருக்கின்றன. அவற்றை திறந்த மனதுடன், பல்வேறு
உத்தியுடன் அணுக வேண்டும். கடந்த சில
மாதங்களாக இலங்கையில்
நல்லதொரு மாற்றம்
ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள
அமைதியை நிலை
நிறுத்துவதற்காக எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை நிச்சயமாக பாராட்டத்தக்கவை. இலங்கையுடன்
பல்வேறு விஷயங்களில்
நெருங்கி பணியாற்றுவதற்கு
அமெரிக்கா விரும்புகிறது.
இரு நாட்டு
அரசுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை
ஆண்டுதோறும் நடத்துவதற்கு, நானும், அமைச்சர்
மங்கள
சமரவீரவும் சம்மதித்து உள்ளோம். இவ்வாறு கெர்ரி
பேசினார்.
0 comments:
Post a Comment