மியான்மர் கடற்படை
புலம்பெயர்ந்து சென்ற 727 முஸ்லிம்களைக் கைது செய்துள்ளது


An Indonesian woman holds a poster of Myanmar's President Thein Sein and Buddhist monk Ashin Wirathu, a extremist monk known for railing against Muslims, during a protest against Wirathu as police stand guard in front of the Myanmar embassy in Jakarta, Indonesia on Friday.


நடுக்கடலில் படகின் மூலம் புலம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த 727 பேரை மியான்மர் கடற்படை கைது செய்துள்ளது.
மியான்மரில் இருந்து ரோகிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு கடல் வழியாக குடிபெயர்ந்து செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் நபர்களை அகதிகளாக ஏற்க அந்த நாடுகள் மறுக்கிறது. இதனால் அதில் உள்ள மக்கள் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே மரணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுமார் 3500 பேர் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்களை மீட்க மலேசியா மற்றும் இந்தோனேசியா அரசுகள் முடிவு செய்து நடுக்கடலில் கப்பல் மூலம் தேடிவருகிறார்கள். இவர்களுடன் மியான்மர் கடற்படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இவர்கள் நேற்றுக் காலை சுமார் 727 பேர் நடுக்கடலில் சென்று கொண்டிருந்ததை பார்த்து உடனே கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மியான்மரின் வடக்குப்பகுதியில் உள்ள ரஹினே மாநிலத்தைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் அல்லது வறுமையின் காரணமான வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
727 பேர்களில் 608 ஆண்களும், 74 பெண்களும், 45 குழந்தைகளும் அடங்குபவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top