சம்மாந்துறையில் எம்பி என்ற ஒரு வடையைச் துாக்கிச்
செல்ல
ஆயிரம் காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன
மக்கள் நண்பன் - சம்மாந்துறை
அன்சார்.
முதலில் இந்தக் கட்டுரையை வாசித்து
உள்
நுழைவதற்கு
முன்னர்
ஒன்றைத்
தெரிந்து
கொள்ளுங்கள்.
இந்தக்
கட்டுரை
யாருக்கும்
ஆதரவாகவோ
எதிராகவோ
அன்றி
சம்மாந்துறையின்
நலனில்
அக்கறை
கொண்டே
என்னால்
எழுதப்படுகின்றது
என்பதை
மனதில்
இறுத்திக்
கொள்ளுங்கள்.
சம்மாந்துறையில் ஒரு விடயத்தைப் பற்றித்தான் தொன்மைக் காலம் தொட்டு அண்மைக் காலம் வரை பேசிக் கொண்டிருக்கின்றார்கள் அதாவது சம்மாந்துறையில் ஒரு வடை சுடப்பட இருக்கின்றது அந்த வடையைச் துாக்கிச் செல்ல ஆயிரம் காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன அந்த வடையை யாரிடம் ஒப்படைப்பது என்பதுதான் சம்மாந்துறையின் இன்றைய அரசியல் பேச்சாக, மக்களின் மூச்சாக இருக்கின்றது.
ஒரு
எம்பி என்ற
வடையை வைத்துக்
கொண்டு எத்தனை
பேருக்கு பங்கிட்டுக்
கொடுப்பது..?? நாம் கட்சி ரீதியாகவும், கொள்கை
ரீதியாகவும் பிளவு பட்டு, தான் ஆதரிக்கும்
நபருக்குத்தான் அந்த வடை கிடைக்க வேண்டும்
அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று பிரிந்து
பிரிந்து வாக்குகளைச்
சிதறடித்தால் இம்முறையும் எம்பி என்ற வடையை
முழுங்கி விட்டு
ஏப்பம் தான்
விட வேண்டி
வரும்.
இது
வரை நடைபெற்ற
பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறையில் போட்டியிட்ட வேட்பாளர்களின்
எண்ணிக்கையை விட இம்முறைத் தேர்தலில் போட்டியிட
இருக்கின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக
இருப்பது ”கிழிஞ்சது
போ“ என்று
சொல்லுமளவுக்கு இருக்கின்றது.
இலங்கை
ஜனநாயக நாடு
இங்கு யார்
வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம், யார் வேண்டுமானாலும்
வேட்பாளராக நிற்கலாம், நாம் யாரை வேண்டுமானாலும்
ஆதரிக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் இதில்
தலையிட எனக்கோ
யாருக்கோ எந்தவித
உரிமையும் கிடையாது
ஆனால் சம்மாந்துறையின்
அரசியலைப் பொறுத்த
வரை இம்முறைத்
தேர்தலில் நாம்
பொறுப்புணர்ச்சியோடு எமது வாக்குகளைச்
சிதறடிக்காது வாக்களித்து எமக்கான பிரதிநிதியாக ஒருவரைத்
தேர்ந்தெடுக்க கண்டிப்பாக கடமைப்பட்டுள்ளோம்.
நன்றாக
ஞாபகம் வைத்துக்
கொள்ளுங்கள் இம்முறையும் நாம் சம்மாந்துறைக்கான பாராளுமன்ற உறுப்பினரை இழந்து விட்டால்
மீண்டும் ஐந்து
வருடங்கள் அடுத்த
ஊரவர்களைப் பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க
வேண்டும் அத்தோடு
மாத்திரமல்ல வேட்பாளர்களின் எண்ணிக்கை அடுத்த பாராளுமன்றத்
தேர்தலில் இதை
விட பல
மடங்காக அதிகரிக்கும்
என்பதிலும் சந்தேகமில்லை, ஏன் நான் கூட
களம்மிறங்கலாம்.
இந்தக்
கட்டுரையை வாசிப்பவர்கள்
ஏதோ வாசித்தோம்
கருத்து தெரிவித்தோம்
மற்றும் பல்
இழுச்சோம் என்றில்லாமல்
பொறுப்புணர்ச்சியோடு இம் முறை
சம்மாந்துறைக்கு எம்பியைப் பெற்றுக் கொள்ள நான்
முனைப்போடு இருந்து எனது வாக்கை சிதறடிக்காது
பொறுத்தமான வேட்பாளருக்கு வாக்களிப்பேன்
என்று சத்தியம்
செய்து கொள்ளுங்கள்,
உங்கள் குடும்பத்தாருக்கும்
அறிவுறுத்துங்கள்.
சம்மாந்துறையில்
இம்முறை தேர்தலில்
குதிக்க இருக்கும்
வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால்
01.ஒரு
சிலர் தாம்
களமிறங்கினால் சத்தியமாக வெற்றியடைய மாட்டோம் என்று
நன்கு தெரிந்தும்
அவர்களது எதிர்கால
அரசியல் விளம்பரங்களுக்காக
குதிக்க இருக்கின்றார்கள்.
02. இன்னும் சிலர் வடிவேல் சொல்வது
போன்று ஏய்..பாத்துக்கோ பாத்துக்கோ
இன்னையில் இருந்து
நானும் ரவுடிதான்
நானும் ரவுடிதான்
என்று சொல்வது
போன்று நானும்
அரசியல்வாதிதான் நானும் அரசியல்வாதிதான் என்று விளம்பரத்துக்காக
குதிக்க இருக்கின்றார்கள்.
03. இன்னும் சில பேர் நாம்
வெற்றியடையாவிட்டாலும் பரவாயில்ல அந்தக்
கட்சியும், கட்சியின் வேட்பாளரும் வெற்றியடைக் கூடாது
எனக் களமிறங்கி
வாக்குகளை சிதறடிக்க
முயற்ச்சிக்கின்றார்கள்.
04. இன்னும் ஒரு சில குழுக்கள்,
இருக்கிறவன் ஒருத்தனும் சுத்தமில்லை எம்பிக்குத் தகுதியில்லை
நாம்தான் தகுதி,
நாம்தான் சம்மாந்துறையை
ஆள வேண்டும்
என்று குதிக்க
இருக்கின்றார்கள்.
05. இன்னும் சிலர் நாம் வெற்றியடையாவிட்டாலும்
பரவாயில்ல சம்மாந்துறை
மக்களின் மனங்களில்
நம் கட்சியையும்,
கொள்கையையும் விதைத்து விட்டால் போதும் மற்ற
கட்சிகளை சிதைத்து
விட்டால் போதும்
என்பற்காக குதிக்க
இருக்கின்றார்கள்.
06. இன்னும் சிலர் பல காலமாக
சம்மாந்துறை அரசியலில் நாம் இருந்து தாம்
வகித்த பதவிற்கேற்ப
நம்மால் முடிந்த
அளவு மக்களுக்கு
சேவை செய்திருக்கின்றோம்
பாராளுமன்ற உறுப்புரிமை கிடைத்தால் மேலும் பல
சேவை செய்யலாம்
என்ற நோக்கோடு
குதிக்க இருக்கின்றார்கள்.
07. இன்னும் சிலர் நம்மிடம் காசு,
பணம், துட்டு,
மணி இருக்கு
ஒரு பதவி
இல்லையே அது
இருந்தால் நன்றாக
இருக்குமே என்பதற்காக
அந்த பதவியை
அடைய குதிக்க
இருக்கின்றார்கள்.
08. இன்னும் சிலர் “சார் நீங்க
எம்பிக்கு எழும்புங்க
சார் நீங்க
பொறுத்தமாக இருப்பிங்க சார், நாங்க ஆதரவு
தாரம் சேர்
என்று அடுத்தவன்
உசுப்பேத்தி உசுப்பேத்தி உஷார் மடையர்களாக குதிக்க
இருக்கின்றார்கள்.
சம்மாந்துறைக்கு
எம்பியாக யார்
தகுதியானவர்...??? யாருக்கு வாக்களிப்பது
சிறந்தது...??? யார் குறுகிய அரசியல் ஆதாயம்
தேடுகின்றார்கள்...??? யார் அரசியல்
விளம்பரம் தேடுகிறார்கள்...???
யார் உண்மையாக
மக்களுக்கான அரசியல் செய்கின்றார்கள்...??
எந்தக் கட்சி
வேட்பாளர் ஊருககுப்
பொருத்தமானவர் அப்பதவிக்குப் பொருத்தமானவர்..??
என்பதை தேர்தல்
வருவதற்கு முன்னர்
நன்கு ஆராய்ந்து
சிந்தித்து குப்பைகளை தொட்டியில் போட்டு விட்டு
அதில் இருக்கும்
மணியை பொறுக்கி
சம்மாந்துறை சார்பாக நம் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில்
அமரச் செய்ய
நாம் முயல
வேண்டும்.
பொறுப்புணர்ச்சி மிக்க சம்மாந்துறைக் குடிமகன் இம்முறை எம்பி இல்லாது சம்மாந்துறையைக் கைசேதப்பட விட மாட்டான்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
0 comments:
Post a Comment