முஸ்லிம் என்பதால்
நிறுவனம் ஒன்றினால் நிராகரிக்கப்பட்ட
இளைஞருக்கு பல்வேறு நிறுவனங்கள் வேலை தர விருப்பம்
முஸ்லிம்
என்பதால் வேலை
இல்லை என்று
நிராகரிக்கப்பட்ட இளைஞருக்கு பிரபலமான அதானி குழுமத்தில்
வேலை கிடைத்துள்ளது.
மும்பையை
சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான்
அலி கான்(வயது 23). பன்னாட்டு
நகை ஏற்றுமதி
நிறுவனம் ஒன்றின்
வேலைக்கு ஆள்
தேவை என்ற
விளம்பரத்தை பார்த்து இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்த 15-வது நிமிடத்தில் அவருக்கு ஒரு
பதில் வந்துள்ளது.
ஆர்வமாக மின்
அஞ்சலை திறந்து
பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு
வந்த ஒரு
வரி பதிலில்
"நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறோம்"
என கூறப்பட்டிருந்தது.
தனக்கு
வந்த மின்
அஞ்சலை ஸ்கீரின்
ஷாட் எடுத்து
சமூக வலைதளங்களில்
பகிர்ந்ததையடுத்து இந்த பிரச்சனை
ஊடகங்களின் தலைப்பு செய்தியானது. இதனை அடுத்து
அவருக்கு பல
தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்தது. மேலும்
பல்வேறு நிறுவனங்கள்
அவருக்கு வேலை
தர முன்வந்தன.
இந்நிலையில்
ஜேஷான் அலி
கான் அகமதாபாத்தை
தலைமையிடமாக கொண்டு இயங்கும் அதானி குழுமத்தில்
வேலைக்கு சேர
முடிவெடுத்துள்ளார். விரைவில் மும்பையில்
உள்ள அதானி
ஏற்றுமதி நிறுவனத்தில்
நிர்வாக பயிற்சி
பெற்று பொறுப்பேற்க
உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.