இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் அமோக வெற்றி
மீண்டும் பிரதமர் ஆகிறார்
மீண்டும் பிரதமர் ஆகிறார்
இங்கிலாந்தில்
நேற்று முன்தினம்
நடந்த நாடாளுமன்ற
தேர்தலில், மொத்தம் உள்ள 650 தொகுதிகளில், 331 இடங்களில் வெற்றி பெற்று, கன்சர்வேட்டிவ்
கட்சி ஆட்சியை
கைப்பற்றி உள்ளது.
இதையடுத்து, மீண்டும் நாட்டின் பிரதமர் ஆகிறார்
டேவிட் கேமரூன்.
இங்கிலாந்தில், மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் நேற்று
முன்தினம் நாடாளுமன்ற
தேர்தல் நடைபெற்றது.
இதில், 3971 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் பல்வேறு
கட்சிகள் போட்டியிட்டாலும்,
தற்போதை பிரதமர்
டேவிட் கேமரூனின்
கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையேதான்
கடும் போட்டி
நிலவியது. வாக்குப்
பதிவு நேற்று
முன்தினம் இரவு
10 மணி வரைக்கும்
நீடித்த நிலையில்,
அதன் பின்னர்
வாக்கு எண்ணிக்கை
தொடங்கியது. இதற்கிடையே, தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை
கிடைக்காது என்றும், கேமரூன் மீண்டும் பிரதமர்
ஆவார் என்றும்,
கருத்துக் கணிப்பு
தகவல்கள் வெளியாகின.
வாக்கு
எண்ணிக்கை தொடங்கியதில்
இருந்து பெரும்பாலான
இடங்களில், கன்சர்வேட்டிவ் கட்சியே முன்னிலை வகித்து
வந்தது. சில
இடங்களில் தொழிலாளர்
கட்சி முன்னிலை
பெற்றது. இந்த
நிலையில், நேற்று
மாலை இறுதிகட்ட
முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், மொத்தம்
உள்ள 650ல்,
331 தொகுதிகளில், கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி வாகை
சூடியது. 232 தொகுதிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்
கட்சி, 2ம்
இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக
எஸ்.என்.பி எனப்படும்
ஸ்காட்டிஷ் தேசிய கட்சி 56 இடங்களில் வெற்றி
பெற்று மூன்றாம்
இடத்தை பிடித்தது.
மற்ற கட்சிகள்
அனைத்துக்கும் 10க்கு குறைவான இடங்களே கிடைத்தன.
இதையடுத்து, இங்கிலாந்தின் பிரதமராக 2வது முறையாக
பதவியேற்க உள்ளார்
டேவிட் கேமரூன்.
வெற்றி
குறித்து கேமரூன்
கூறுகையில், “அனைத்து வெற்றிகளுடன் ஒப்பிடும்போது, இது
மிகவும் இனிப்பான
வெற்றி. தனிப்
பெரும்பான்மை பெற்று அமையும் அரசால், அனைத்துவித
வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்ற
முடியும்” என்று தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில்
அதிகாரங்களை பரவலாக்குவேன் என்றும், வேல்ஸ் மற்றும்
வடஅயர் லாந்தில்
அதிகார பரவலை
விரிவுபடுத்துவேன் என்று கேமரூன்
தேர்தல் வாக்குறுதி
அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர்
பதவிக்கான போட்டியில்
தோல்வியை தழுவிய
எட் மிலிபண்ட்,
தனது தொழிலாளர்
கட்சியின் தலைவர்
பதவியை ராஜினாமா
செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த
தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு ஏற்றுக்
கொள்கிறேன்.” என்று
தெரிவித்திருக்கிறார்.
மீண்டும்
பிரதமராக உள்ள
கேமரூனுக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து
வருகின்றனர்.
0 comments:
Post a Comment