சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி
வேலைகள் எதிர்வரும் 11ம் திகதி அங்குரார்ப்பணம்.

     கேட்பதற்கு காதுக்கு இனிமையாகத் தான் இருக்குதப்பா.
இந்தக் கேள்விகளுக்கு யாராச்சும் பதில் தாங்கப்பா.

Maruthoor Mahan


சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்குட்டபட்ட சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம்; ரவூப் ஹக்கீம் தலைமையில் கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம், காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான், அதன் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்;டத்தின் முதற்கட்ட அபிவிருத்தி வேலைகள் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

*********************************************************************************

      கேட்பதற்கு காதுக்கு இனிமையாகத் தான் இருக்குதப்பா.
இந்தக் கேள்விகளுக்கு யாராச்சும் பதில் தாங்கப்பா.

Maruthoor Mahan
1) இந்த வேலைத்திட்டத்தின் வரைபடம் எங்கே?
2) இந்த வேலைத்திட்டத்தில் என்னென்ன நடக்கப்போகிறது?
3) இதற்கான மூன்று கோடி நிதி எங்கிருந்து வருகிறது?
4) இந்த வேலைத்திட்டத்தை செய்யப்போகும் கொந்தராத்துக்காரர் யார், அவருக்கு வழங்கப்பட்டது எப்படி?
5) பாலங்களும் செய்யப்படுவதென்றால், அதன் நீள அகலம், மற்றும் அதனை செய்யப்போகும் கொந்தராத்துக்காரர் யார்?
6) எவ்வளவு காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று வரையறை உண்டா?
7) இதில் கல்முனை மேயர், சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு, மாநகர சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பு என்ன?
8) கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்பு என்ன?
9) இதற்கு பொறுப்பாக இருக்கப்போவது யார்?
இது என்ன முந்நூறு ரூபாய்க்கு செய்யம் வேலையா? ஏதோ வந்தாக, ஏதோ செய்தாக, அதோ போயிட்டாங்க என்பதற்கு. முந்நூறு இலட்சம் ரூபாய்க்கான வேலைத்திட்டம். அங்குரார்ப்பணம் செய்ய முதல் எவ்வளவு படிமுறைகளைத் தாண்டி வரவேண்டும், எத்தனை எத்தனை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது கூடத் தெரியாமல் வெறுமனே சொன்னதைக் கேட்டு மயங்கிப்போயிருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் எந்த பதிலும் இல்லாமல் அது எப்படி வெறுமனே 11ம் திகதி அங்குரார்ப்பணம் செய்வது? யார் அங்கே? கூப்பிடுங்கள் அந்தப் புத்தஜீவிகளை. உங்களுக்கு எங்கே போச்சு புத்தி? அவர் 11ம் திகதி அங்குரார்ப்பணம் செய்வது என்றால், அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்க மாட்டீர்களா? குறைந்த பட்சம் அங்குரார்ப்பணம் செய்யும் போதாவது இந்த வேலைத்திட்டத்தின் மாதிரிப்படம் திரைநீக்கம் செய்து வைக்கப்படுமா? அல்லது இன்னுமொரு சுரி அள்ளும் படலம் மட்டும் அரங்கேற்றப்படுமா? நீங்க ஏமாறுவதற்குத் தயாராக இருக்கும்போது, நாங்க உங்களை ஏமாற்றாம விட்டா அதுவும் தப்புத் தானே?







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top