அஷ்ரப் வைத்தியசாலையில்
என்னதான் நடக்கிறது..?
Mohammed Mujeeb Ismail
சுகாதார
அமைச்சின் பிரதான
கணக்காளரை இன்று
காலையில் சந்தித்த
எனக்கு ஒரு
அதிர்ச்சி..
சுமார்
ஒரு மாதத்திற்கு
முன்னர் அமைச்சால்
அஷ்ரப் வைத்தியசாலைக்கு
நியமிக்கப்பட்ட புதிய கணக்காளர் இதுவரை எந்தவொரு
ஆவணத்திலும் கையெழுத்திட அனுமதிக்கப்படவில்லையாம்..
காரணம்,
கணக்காளர் எவரும்
இல்லாத காலப்பகுதியில்
(ஓரிரு வாரங்கள்)
பகுதி நேர
கணக்காளராக வேலை பார்த்த மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை கணக்காளர் இன்னும் அங்கு வந்து
எல்லா கணக்கு
வழக்கு சம்மந்தமான
ஆவணங்களிலும் கையெழுத்திடுகிறாராம்..!
இன்னொரு
கணக்காளர் அங்கு
வருவதற்கும், அவர் கடமை மேற்கொள்வதற்கும் வைத்திய அதிகாரியினால் எந்தவொரு எதிர்ப்பும்
காட்டப்படவில்லையாம்..!!
இத்தனைக்கும்,
வைத்திய அதிகாரியின்
எழுத்துமூல கோரிக்கையின் பின்னரே அமைச்சு புதிய
கணக்காளரை நியமித்ததாக
எனக்குக் கடிதமும்
காட்டப்பட்டது..
அத்தோடு,
புதிய கணக்காளர்
கடமையேற்றுக் கையளித்த கடிதமும் என்னிடம் காட்டபட்டது..!
புதிய
கணக்கதிகாரியின் நியமனக் கடிதத்தின் பிரதியொன்று கிடைக்கப்பெற்றது
(படம் இணைக்கப்பட்டுள்ளது)
மிக
அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், புதிதாய் நியமிக்கப்பட்டவர்
ஒரு பெண்,
இடையூறு செய்பவர்
ஒரு ஆண்;
இருவரும் முஸ்லிம்கள்;
ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள்;
உறவினர்கள்..!!!
**என்னால் பிரதான கணக்காளருக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால், உங்களின் கருத்துக்காக**
0 comments:
Post a Comment