சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பாக
டாக்டர்.எம்.ஐ.எம்.ஜெமீல் (குழு
உறுப்பினர்)
அரசின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பாக ஒரு
விசேட கூட்டம் 2015.02.01ம் திகதி மாகாண சபை உறுப்பினர்
ஏ.எம். ஜெமீல் ஏற்பாட்டில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்
றவுப் ஹக்கீம் அவர்களும் பிரதேச செயலாளர், பெரிய பள்ளிவாசல்;
தலைவர்,மற்றும் அழைக்கப்பட்ட நன்மதிப்பாளர்களும்
புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அரசின் 100 நாள்
அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துச்
செயற்பட பின் வருவோரை உள்ளடக்கிய ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது.
1. பொறியியலாளர்
எம்.ஐ.ஐ.ஜெஸீல் (தெ.கி.ப.)- தலைவர்
2. கலாநிதி
ஏ.எம். றஸ்மி (தெ.கி.ப.)- செயலாளர்
3. .பொறியியலாளர்
எம்.ஆர்.எம். பர்ஹான் (இ.மி.ச.)-பொருளாளர்
4. டாக்டர்.எம்.ஐ.எம்.ஜெமீல்
5 .ஜனாப்.
ஐ.எல்.ஏ.மஜீPட் (ஓ.பெ.அதிபர்)
6 .டாக்டர்.
என். ஆரிப் (மாவட்ட வைத்திய அதிகாரி)
7. கலாநிதி.
எம்ஐ.எம். ஹிலால் (தெ.கி.ப.)
8. கலாநிதி.
ஏ.ஜஹ்பர் (தெ.கி.ப.)-
9. ஜனாப்.ஏ.எச்.எம்.றியாஸ்
(CCD.)
மேற்படி குழு 2015.02.05ம் திகதி கூடி தோணா அபிவிருத்தி வேலைகளை மட்டும் அரசின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுப்பது எனத் தீர்மானித்து இது
தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திக்க.மா.ச.உ. ஏ.எம். ஜெமீல் அவர்களையும் கௌரவ
அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆயினும் எதிர்பாராத
விதமாக ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள் காரணமாக இரண்டு மாதங்கள் எவ்வித முன்னேற்றங்களும்
இல்லாமல் கடந்தன.
2015.04.05ம்
திகதி, குழுவின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் றவுப் ஹக்கீம்
அவர்கள் சாய்ந்தமருது பிரதேச.செயலக மண்டபத்தில் குழுவைச் சந்தித்துரையாடினார். அவ்வேளை
SLLRDC யின் நிபுணத்துவக்குழுவொன்றை அனுப்ப சம்மதித்தார்.
2015.04.10ம்
திகதி SLLRDC யின் தலைவர் சட்டத்தரணி M.H.M சல்மான் தலமையில் ஒரு நிபுணத்துவக் குழு சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து எமது
குழுவைச் சந்தித்த பின்னர் தோணாவை முகத்துவாரம் தொடக்கம் காரைதீவு வெட்டாறு வரை முழுமையாகவும்
விரிவாகவும் பார்வையிட்டனர். நிபுணத்துவக் குழு வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் சமகாலத்தில்
தோணாவில் உள்ள கழிவுகளை அகற்றிச் சுத்தப்படுத்தும் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகத்
தலைவர் குழுவிடம் தெரிவித்தார்.
JiCA வின் வரைபடத்திற்கமைய தோணவின்
உயர்ந்த பகுதி (Upper Reach) காரைதீவு பிரதேசத்திலும் நடுப்பகுதி (Middle Reach) மற்றும் தாழ்ந்த பகுதி (Lower Reach) சாய்ந்தமருது பிரதேசத்திலும்
காணப்படுகின்றது. தற்போது நடுப்பகுதியிலும் தாழ்ந்த பகுதியிலுமே அபிவிருத்தி வேலைகள்
செயவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நடுப்பகுதியில் பாதுகாப்புச்சுவர்
கட்டுதலும் தோணா ஓரமாக நடை பாதையுடன் பூங்கா ஏற்படுத்தல் முக்கியமாகக் காணப்படுகின்றது.
அதே வேளை தாழ்ந்த பகுதியில் பாதுகாப்பு சுவர்களும் மீன்பிடியாளர்களுக்கான சேவை மற்றும்
படகுத்தரிப்பு வசதிகள் முக்கியபடுத்தப்பட்டுள்ளன.
2015.05.01ம்
திகதி SLLRDC பணிப்பாளர் மௌலவி SLM ஹனிபா அவர்களின் அழைப்பின் பேரில்
குழு உறுப்பினர்கள் சாய்ந்தமருது பி.செயலகத்தில் கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களைச்
சந்தித்தனர். .இச்சந்திப்பின் போது SLLRDC தலைவர், பிரதேச செயலாளர், கல்முனை
மாநகர சபை உறுப்பினர் கௌரவ பிர்தௌஸ் ஆகியோரும் சில ஊர்ப்பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர்;.இச்சந்திப்பின்போது கௌரவ அமைச்சர் அவர்கள் தோணா அபிவிரத்தி திட்டத்திற்கு திறைசேரி
30 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண
நிகழ்வு 11.05.2015 இல் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் பொறியியலாளர்
ஒருவரின் தலைமையில் இங்கு காரியாலயம் ஒன்று அமையவிருப்பதாகவும் தேவையான இயந்திரங்கள்
இங்கு நிறுத்திவைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு
SLLRDC தலைவருக்கும் பணிப்பாளருக்கும் பணிப்புரை வழங்கினார்.அச்சமயம் குழு உறுப்பினர்கள்
சில விடயங்களைச் சுட்டிக்காட்டினர். பாதுகாப்புச்சுவர்கள் கட்டும்போது ஆழமாகவும் உறுதியாகவும்
அத்திவாரம் இடல், தோணாவின் உயர்ந்த பகுதிகளிலிருந்து சல்வீனியா மற்றும்
கழிவுப் பொருட்கள் நடுப்பகுதிக்கு வராது தடுப்பதற்கான ஏற்பாடுகள், சில வீடுகளிலிருந்து தோணாவுக்குள்
கழிவு நீர் செல்வதைத் தடுக்க மாற்றொழுங்குகள், 03 பாலங்கள்
நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பாலங்கள் அமைப்பது தொடர்பாக வீதி
அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை இத்திட்ட வேலைகள்
தொடர்பாக கௌரவ நாடாளுமன்ற .உறுப்பினர்.,மாகாண சபை உறுப்பினர்,
கல்முனை மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், நகர அ.அ.சபை மற்றும் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய கூட்டம் 11.05.2015 காலை கல்முனை மாநகர சபை வளாகத்தில் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் பணிப்பாளர் மௌலவி
ஹனிபாவை வேண்டிக் கொண்டார்.
0 comments:
Post a Comment