முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர்

அல்ஹாஜ் .ஆர். மன்சூர் அவர்களின்

பிறந்த நாள் இன்று


முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் அல்ஹாஜ் .ஆர். மன்சூர் அவர்களின் பிறந்த தினம் இன்று மே மாதம் 30 ஆம் திகதி ஆகும். அவரை  நீடூழி காலம் வாழவேண்டும் என வாழ்த்துவதுடன் அவரின் வாழ்வின் நினைவுக் குறிப்புக்களையும் அது தொடர்பான சில புகைப்படங்களையும் இங்கு தருகின்றோம்.


திகதி
குறிப்புக்கள்
1933.05.30
கல்முனைக்குடியில் எக்கின் தம்பி ஆலிம் அப்துல் றஸ்ஸாக் அவர்களுக்கும், முகம்மது அப்துல் காதர் சரிபா உம்மா அவர்களுக்கும்  ஆறாவது குழந்தையாகப் பிறப்பு.
1943
5 ஆம் ஆண்டு அரசாங்கப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
1944
காத்தான்குடி முஸ்லிம் மத்திய கல்லூரியில் இணைந்து கற்றல்
1945 - 1947
ஆங்கில பாடசாலையாக அறிமுகமான கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து ஆங்கிலக் கல்வியை ஆர்வமாகக் கற்றல்.
1947
மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் இணைதல்
1948 - 1952
திரு. ராஜகாரியர் அதிபராக இருந்த மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் இணைதல். தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்ற  புலவர்மணி .பெரியதம்பிப் பிள்ளையிடம் கற்றல்.
1953 - 1954
உயர் கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து உயர்தர தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைதல்.
1955 - 1958
கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைதல். இக்கல்லூரியின் தூது கோஷ்டிகளில் பங்குபற்றி பாகிஸ்தான் செல்லுதல்.
1958
உயர்நீதிமன்ற அப்புக்காத்தாக சத்தியப்பிரமாணம்.
1958 - 1961
பிரபல சட்டத்தரணிகளான ஜி.ஜி.பொன்னம்பலம், இஸ்ஸதீன் முகம்மட், .சி.எம்.அமீர், முன்னாள் பிரதம நீதியரசர் என்.டி.என்.சமரகோன் ஆகியோருடன் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில் புரிதல்.
1958
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரைத் திருமணம் செய்தல்.
1964
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைதல். கல்முனை பட்டின சபைத் தேர்தலில் போட்டியிடுதல்.
1970
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கல்முனைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 955 குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் துரதிஸ்டவசமாகத் தோல்வியுறல்.
1977
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கல்முனைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றஉறுப்பினராகத்தெரிவுசெய்யப்படுதல். பாராளுமன்றத்தின் கணக்குக்குழு, நெடுஞ்சாலைகள் ஆலோசனைக் குழு, போக்குவரத்துச் சபை ஆலோசனைக்குழு, கைத்தொழில் விஞ்ஞான அபிவிருத்தி ஆலோசனைக் குழு, கல்வி ஆலோசனை குழு, பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக் குழு என்பனவற்றில் இடம்பெற்றதோடு பேராதனைப் பல்கலைக்கழக செனட் சபை அங்கத்தவராகவும் நியமனம் பெறல். ஈராக், குவைத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை தூதுக் கோஸ்டியில் இடம்பெற்று நல்லெண்ண விஜயங்களை மேற்கொள்ளல்.
1979
யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமனம் பெறல்.
1980
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இலங்கை தூதுக் கோஸ்டியில் இடம்பெற்று வாஷிங்டன், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்.
1981
மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றிக்கு நல்லெண்ண விஜயங்கள் மேற்கொள்ளல்.
1989
இலங்கை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது முஸ்லிம் ஒருவராக அமைச்சரவை அந்தஸ்துள்ள வர்த்தக, வாணிபத்துறை அமைச்சராகவும் நியமனம் பெறல்.

குவைத் நாட்டின்  இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்தல்.
இக்காலத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மிகப் பெரிய பணியினைச் செய்திருக்கிறார். குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இப்பல்கலைக்கழகத்தில் எட்டு கட்டிடங்கள் கிடத்துள்ளன. பல்கலைக்கழக ஊழியர்களின் தங்குமிட வசதிக்கு கட்டப்பட்டுள்ள 23 தனித்தனி ஊழியர் விடுதி இல்லங்கள், இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீடத்தின் அழகிய புதிய கட்டிடத் தொகுதி, சுமார் ஆயிரம் மாணவர்களுக்கான  இரண்டு விடுதிக் கட்டிடங்கள், மாணவர் நலன்புரிக் கட்டிடம், பொறியியல்பீட கட்டிடத் தொகுதி, கம்பிரமான விளையாட்டரங்கு என்பன இவற்றுள் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியவைகளாகும்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top