எனது மரண தண்டனைக்கான நேரம் நெருங்கிவிட்டது
இந்தோனேசிய சிறையில்
உள்ள பாட்டி உருக்கமான கடிதம்
எனது மரண தண்டனைக்கான நேரம்
நெருங்கிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் நான் இறக்க நேரிடலாம் என்பது எனக்கு தெரியும்.
நாளையே கூட எனது சிறை அறையில் இருந்து அழைத்து சென்று தண்டனை நிறைவேற்றப்படலாம் என இந்தோனேசிய சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பாட்டி தனது
குடும்பத்தவர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரிட்டன்
நாட்டை சேர்ந்தவரான
58 வயது லிண்ட்சே
சான்டிபோர்டு, இந்தோனேசியாவில் உள்ள பாலி விமான
நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு தரையிறங்கிய
போது போதை
பொருள் கடத்தி
வந்ததாக கூறி
கைது செய்யப்பட்டார்.
அந்நாட்டு
பொலிஸார் அவரிடம் நடத்திய
விசாரணையின் போது, போதை மருந்தை கொண்டு
செல்லாவிட்டால் தனது மகனை கடத்தல்காரர்கள் கொன்று
விடுவதாக மிரட்டியதாக
அவர் கண்ணீர்
விட்டு கதறினார்.
ஆனால் அவரது
கூற்றை ஏற்க
மறுத்த இந்தோனேசிய
நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து
நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் எந்நேரமும் தனக்கு
மரண தண்டனை
நிறைவேற்றப்படலாம் என்று பிரிட்டனில்
உள்ள தனது
பாட்டி குடும்பத்தாருக்கு
லிண்ட்சே உருக்கமான
கடிதம் எழுதியுள்ளார்.
அதில்
அவர் கூறியிருப்பதாவது;
எனது
மரண தண்டனைக்கான
நேரம் நெருங்கிவிட்டது.
எப்போது வேண்டுமானாலும்
நான் இறக்க
நேரிடலாம் என்பது
எனக்கு தெரியும்.
நாளையே கூட
எனது சிறை
அறையில் இருந்து
அழைத்து சென்று
தண்டனை நிறைவேற்றப்படலாம்.
எனினும் மரணத்தை
கண்டு நான்
பயப்படவில்லை. நான் கொல்லப்படும் நேரத்தில் "மேஜிக்
தருணங்கள்"
என்ற உற்சாகமான
பாடலை பாட
முடிவு செய்துள்ளேன்.
தைரியசாலியான
நான், கொல்லப்படும்
நேரத்தில் எனது
கண்களை கட்டிக்கொள்ள
விரும்பவில்லை. என் மீது துப்பாக்கி சூடு
நடத்துபவர்கள் என்னை பார்க்கவேண்டும் என்று நான்
விரும்புகின்றேன். இத்தருணத்தில் எனது
பேரக்குழந்தையை பார்க்க முடியாதது மட்டுமே எனக்கு
வருத்தத்தை அளிக்கிறது என்று லிண்ட்சே தனது
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதில்
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில தினங்களுக்கு
முன் மரண
தண்டனை நிறைவேற்றப்பட்ட
ஆண்ட்ரூ சானும்,
லிண்ட்சேவும் நெருங்கிய நண்பர்கள் என்பது தான்.
எனது வாழ்க்கையில்
நான் சந்தித்த
ஹீரோக்களில் சானும் ஒருவர் என்று லிண்ட்சே
புகழாரம் சூட்டியுள்ளார்.
எப்படியாவது
மரண தண்டனையிலிருந்து
லிண்ட்சேவை காப்பாற்ற வேண்டும் என்று போராடி
வரும் அவரது
குடும்பத்தினர், மரண தண்டனையை எதிர்த்து இந்தோனேசிய
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க
திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிதி
உதவி செய்யுமாறு
பிரிட்டன் அரசிடம்
அவர்கள் கோரிக்கை
வைத்தனர். ஆனால்
அவர்களது கோரிக்கையை
ஏற்க அந்நாட்டு
அரசு முன்வரவில்லை.
இதையடுத்து லிண்ட்சேவின் குடும்பத்தினர்
சொந்தமாகவே நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக
ஈடுபட்டுவருகின்றனர்.
ஒருவேளை
இந்தோனேசிய உச்சநீதிமன்றம் லிண்ட்சேவின்
மரண தண்டனையை
உறுதிப்படுத்தினாலும், அந்நாட்டு அதிபர்
ஜோகோ விடோடோவிடம்,
லிண்ட்சே கருணை
மனு சமர்ப்பிக்க
வழியுள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது
லிண்ட்சே மரண
தண்டனையில் இருந்து விடுபட்டால் போதும் என்ற
எதிர்பார்ப்புடன் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment