இன்று உலக பட்டினி
தினம்
இன்று
மே 28ஆம் திகதி உலக
பட்டினி தினம்.
‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான் பாரதி. பசி, உணவின் முக்கியத்தை உணர்த்தவே
இத்தனை ஆவேசத்துடன்
அவன் கவிதை
வடித்தான். பசி ஒரு பெரும் கொடுமை, ஒருவரை உயிரோடு
கொல்லும் மரணத்திற்குச் சமம். எய்ட்ஸ், எபோலா
போன்ற உயிர்கொல்லி
நோய்களால் ஆண்டுதோறும்
இறப்போர் எண்ணிக்கையை
காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே
அதிகம் என ஐ.நா அறிக்கை
வெளியிட்டுள்ளது. பட்டினி குறித்த ஐக்கிய நாடுகள்
அமைப்பின் உணவு
மற்றும் வேளான்அமைப்பு (F.A.O) கடைசியாக 2013-ல் வெளியிட்ட
புள்ளிவிவரங்கள்.
உலகில்
81 கோடி மக்கள்
இன்னும் பட்டினியுடன்
வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள்
அதாவது 98 சதவீதம்
வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர்.உலகில் 8
பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு
கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில்
52 கோடி மக்கள்,
ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள், லத்தீன்
அமெரிக்கா மற்றும்
கரீபியன் நாடுகளில்
4 கோடி மக்கள்,
வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில்
வாழ்கிறார்கள். உலகில் ஊட்டச்சத்துக்குறைவால்
5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள்
ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில்
66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்
(Global hunger index list) தெரிவிக்கிறது.
பட்டினிச்
சவாலை அதிகமாக
ஆசியா, மேற்கு
ஆசியா மற்றும்
ஆப்ரிக்க கண்டங்களில்
உள்ள நாடுகளில் அதிகஅளவில்
எதிர்கொண்டு வருகின்றனர்.
உலக
நிலைமைகள் இவ்வாறு
இருக்கையில் இலங்கையின் நிலைமை குறித்து தற்போது
பார்ப்போம். இலங்கையை பொறுத்தவரை கடந்த 2013 ஆம்
ஆண்டு கணக்கெடுப்பின்படி
நாட்டின் வறுமை
வீதமானது 6.7 ஆக அமைந்துள்ளது. கடந்த 20 வருடங்களை
எடுத்துப்பார்க்கும்போது வறுமை நிலை
குறைவடைந்து வருகின்றமையை நாம் அவதானிக்கின்றோம். குறிப்பாக கடந்த 2002 ஆம் ஆண்டில்
22.7 வீதமாக வறுமை வீதம் 2006 ஆம் ஆண்டில்
15.2 வீதமாகவும் 2009 ஆம் ஆண்டில்
8.9 வீதமாகவும் குறைவடைந்து வந்துள்ளது. கடந்த 2013 ஆம்
ஆண்டின் தரவுகளின்
படி முல்லைத்தீவு
மாவட்டமே அதிகளவில்
வறுமைக்குரிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில்
28.8 வீதம் வறுமை காணப்படுகின்றது. அடுத்ததாக மொனராகலை
மாவட்டம் உள்ளது.
இந்த மாவட்டத்தில்
20.8 வீதமாக வறுமை வீதம் காணப்படுகின்றது.
இலங்கையில் மாவட்ட ரீதியான வறுமை நிலை
0 comments:
Post a Comment