பிரதேசவாத தீயில்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவுக்காக 3 பேர்களின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது. உபவேந்தர் தெரிவு அடுத்த வாரமளவில் வெளிவரும். இதில் கவலையான விடயம் யாதெனில், உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற பேராசிரியர் நாஜிம் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பேராசிரியர் நாஜிமின் தகைமையை விமர்சனத்துக்கு உட்படுத்துவது பிரதேசவாத சிந்தனையை அடிப்படையாக கொண்ட காழ்ப்புணர்ச்சி என்றால் அதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஜனாதிபதியின் தெரிவுக்கு சிபாரிசு செய்யப்பட்ட 3 கல்விமான்களும் திறமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் ஏனைய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஜனாதிபதி ஒருவரை உபவேந்தராக தெரிவு செய்வார். நல்லாட்சியின் அடையாளமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு அமையவேண்டும் என்பதே எல்லோரினதும் பொதுவான எதிர்பார்ப்பு.
இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் பேராசிரியர் நாஜிமின்  தகைமைகளை பிரதேசவாத சிந்தனை கொண்ட சிலர் கேள்விக்கு உட்படுத்துவதாகும். பேராசிரியர் நாஜிம் BSc Agri கற்கையை முதற் தர சித்தியுடன் பேராதனை பல்கலைக்கழகத்திலும் MEng கற்கையை தாய்லாந்திலும் PhD கற்கையை மலேசியாவிலும் கற்றுள்ளார்.  இதுதவிர 50 ற்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உலகின் தலைசிறந்த ஆய்விதழ்களில் 20 ற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்வேறு நாடுகளில் தமது தலைசிறந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளார். Sri Lanka Association for Advancement of Science (SLAAS) அமைப்பின் பொது செயலாளராக 2012 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். இன்னும் SLAAS அமைப்பின் பல்வேறு பொறுப்புக்களையும் வகுத்துள்ளார். இலங்கையின் முன்னோடி பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். பல தடவைகள் தமது ஆய்வுகளுக்காக ஜனாதிபதி விருதையும் பல விசேட விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் தனது துறையில் 4 ற்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அதுதவிர இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் தமது பங்களிப்பை தொடர்ந்தும் செய்து வருகின்றார். பல்வேறு புலமைப் பரிசில்களை பெற்றுள்ளதோடு, பல்வேறு விஞ்ஞான ஆய்வுச் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இத்தகைய தகைமைகள் கொண்ட ஒரு கல்விமானை பிரதேசவாத சிந்தனையில் விமர்சிப்பது நாகரிகமான செயற்பாடாகாது.  அவர் வகித்த பதவி நிலைகளை சுருக்கமாக கீழே குறிப்பிடுவதாயின்-.
o   Extensively engaged in curriculum development and revision of three degree programmes in three Universities (Sabaragamuwa, Peradeniya, Kelaniya)
o   Member of Many Professional Societies
o   Ranked among the most outstanding 250 Sri Lankan Scientists
o   Supervision of many Ph.D. and M.Sc. students
o   Consultant in many Sri Lankan projects
o   Secretary – International Relations of the Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) in 2009 and 2010.
o   Council member of the Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) – 2008 – to date
o   Steering Committee member and the Chairman of the Young Scientists Forum (YSF) of the National Science and Technology Commission (NASTEC) for the year 2009
o   Joint Secretary of the Sri Lanka Association for Fisheries and Aquatic Resources (SLAFAR) in 2008/2009, 2009/2010.
o   Member of the Committee for Popularization of Science (CPS) of the Sri Lanka Association for Advancement of Science (SLAAS) – 2009, 2010, 2011, 2012
o   President of SLAAS Section B for the Year 2008.
o   Editorial Board member of  many international Journals (Biodiversitas, International Journal of Environment, Journal of Applied and Industrial Sciences, Sri Lanka Journal of Aquatic Sciences, Taprobanica, South Asian Water Studies (SAWAS) Journal, International Journal of Ecology & Development) and National Journals (Journal of the Agricultural Engineering Society of Sri Lanka, Journal of the Agricultural Engineering Society of Sri Lanka).
 இவ்வாறு அவரது தகைமைகளை பட்டியலிட்டு சொல்லலாம். பேராசிரியர் நாஜிம் பற்றிய தகவல்களை களனி பல்கலைக்கழக இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் இங்கு அவரது திறமையை, தகைமையை நிரூபிப்பது இவ்வாக்கத்தின் நோக்கமல்ல.
 இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், இப்பிரதேசவாத சிந்தனை இப்பல்கலைக்கழகத்தை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதை சிலர் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர். பௌதிக ரீதியான அற்ப காரணங்களை முன்வைத்து இப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர்தான் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வர வேண்டுமென்ற கோரிக்கை இப்பிரதேச புத்திஜீவிகளை அவமானப்படுத்தும் செயலாகும். அவர்களது திறமையை கேள்விக்குற்படுத்துவதாகும், ஏனெனில் இங்கு அவர்களது திறமையை விட பிரதேசவாத நியாயங்களே முன்வைக்கப்படுகின்றன. திறமையான ஒருவர் எப்பிரதேசத்தவராகினும் தமது திறமையை வெளிக்காட்டி தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே நியாயமானது.
நடிகர் நெப்போலியன் கூறுவது போன்று கலியாண வீடு என்றாலும் நான்தான் மாப்பிள்ளை, சாவு வீடு என்றாலும் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்பது போலவே இவர்களது பிரதேசவாத சிந்தனையும் நியாயப்படுத்தலும் உள்ளன. இத்தகைய பிரதேசவாத சிந்தனை இப்பிரதேச புத்திஜீவிகளுக்கும் வெளி ஊரைச் சேர்ந்த புத்திஜீவிகளுக்குமிடையில் உளவியல் ரீதியான விரிசலை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது என்பதை உரிய தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தெரிவு செய்யப்படுகின்ற ஒருவருக்கு இன்று பெரும் சவாலாக பிரதேசவாத சிந்தனை இருக்கின்றமையை கடந்தகால கசப்பான அனுபவங்களின் ஊடாக கண்டு கொள்ளலாம். அதனது பாதிப்புகள் மதிப்பிட முடியாது. பிற்போக்குத்தனமான, சவால்களை எதிர்கொள்ள முடியாத, சுயநலன் கொண்ட சிலரின் செயற்பாடுகளே இப்பிரச்சினை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இச்சிந்தனையிலிருந்து எப்போது விடுபடுகின்றோமோ அப்போதே தென்கிழக்கு பல்கலைக்கழகம் உண்மையான அபிவிருத்தியைக் காணும்.
மேலும் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவில் அரசியல் தலையீடு செய்யுமாறு அரசியல்வாதிகளை வேண்டுவது, கோரிக்கைகள் விடுப்பது ஒருவகையில் அரசியல்வாதிகளை அச்சுறுத்துவது போன்றதே. இப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை உபவேந்தராக தெரிவு செய்ய சிபாரிசு செய்ய முடியாவிடின் அவ்வரசியல்வாதிகளின் அரசியல் எதிர்க்காலத்தை கேள்விக்கு உட்படுத்த முடியும் என கருத்து வெளியிடுவதும், கடந்த காலத்தில்  உபவேந்தர் தெரிவில் முன்னாள் ஜனாதிபதியிடம் கருணா அம்மான் போன்றோரின் சிபாரிசுகளை பெற்றுக் கொடுத்தது  நாங்கள்தான் என்று சந்தியில் நின்று வீராப்பு பேசிய சம்பவங்கள் போன்று இனியும் இடம் பெறாமல் இருக்க வேண்டும். இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு சுதந்திரமாக இடம் பெற வேண்டும்.
இங்கு தனிநபர் நலனுக்கும் அப்பால் சமூகத்தின் சொத்தாகிய பல்கலைக்கழகத்தின் எதிர்கால நலன் முன்னிறுத்தப்பட வேண்டும். குறுகிய அரசியல், பிரதேசவாத சிந்தனைகள்  இப்பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருந்துவிடக் கூடாது என்பதில் யாரும் மாற்றுக் கருத்தை கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

எம். ஐ. ஸாஹிர் MBA (UK)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top