சவூதி அரேபியாவில்
தற்கொலைத் தாக்குதல் சம்பவம்
பலி எண்ணிக்கை 21 ஆக
உயர்வு
சவூதி
அரேபியாவில் மசூதி ஒன்றின் மீது நேற்று 22 ஆம்
திகதி வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத்
தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர் 80 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு
ஐ.எஸ்.
தீவிரவாத
அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து
அந்நாட்டு இராணுவ உயரதிகாரி ஒருவர்
கூறியிருப்பதாவது:
சவூதி அரேபியாவின் அல்-குதீஷ் கிராமத்தில்
ஷியா பிரிவு
இஸ்லாமியர்களின் இமாம் அலி மசூதி உள்ளது.
இந்த மசூதியில் வெள்ளிக்கிழமை
தொழுகை நடைபெற்றுக்
கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம
நபர் ஒருவர்,
தனது சட்டைக்குள்
மறைத்து வைத்திருந்த
வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தார்.
இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்தனர்.80 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும்
அருகில் உள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
இந்தத் தாக்குதலுக்கு
ஐ.எஸ்.
தீவிரரவாத
அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தச் சம்பவம்
தொடர்பாக பல்வேறு
புலனாய்வு அமைப்புகள்
தீவிர விசாரணை
நடத்தி வருகின்றன.
முன்னதாக,
கடந்த நவம்பர்
மாதம் ஷியா
பிரிவு இஸ்லாமியர்களைக்
குறி வைத்து
அல்-அஷா
கிராமத்தில் உள்ள மசூதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள்
துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் உயிரிழந்ததும் நினைவுக்கூரத்தக்கது.
0 comments:
Post a Comment