கொலை வழக்கு
நடிகர் சல்மான் கான்
விடுதலை
குடிபோதையில்
வீதியோரம் படுத்திருந்தவர்கள்
மீது காரைச்
செலுத்தி ஒருவரைக்
கொன்ற வழக்கில்
இருந்து பொலிவூட்
நடிகர் சல்மான்
கான் விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.
கடந்த
2002 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு மும்பை
பந்த்ரா பகுதியில்
பொலிவூட் நடிகர்
சல்மான் கான்
குடிபோதையில் காரைச் செலுத்தி வீதியோரம் படுத்திருந்தவர்கள்
மீது ஏற்றியதில்
ஒருவர் பலியானதுடன்
4 பேர் காயமடைந்தனர்.
சல்மான் கான்
மீது வழக்குப்
பதிவு செய்யப்பட்டது.
இந்த
வழக்கில் சல்மான்
கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25
ஆயிரம் அபதாரம்
விதித்து மும்பை
அமர்வு நீதிமன்றம்
கடந்த மே
மாதம் தீர்ப்பளித்தது.
இதை
எதிர்த்து மும்பை
உயர் நீதிமன்றத்தில்
சல்மான் கான்,
மேல் முறையீடு
செய்திருந்தார்.அந்த மனுவை, விசாரணைக்கு ஏற்றுக்
கொள்வதாக உயர்
நீதிமன்ற நீதிபதி
ஏ.ஆர்.ஜோஷி தெரிவித்தார்.
இதனிடையே,
சல்மான் கானின்
மேல் முறையீட்டு
மனுவை, விரைவில்
விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும்,
அதன் மீதான
விசாரணையை தற்போதைக்கு
நிறுத்தி வைக்குமாறும்
கொலை குற்றவாளி
ஒருவர் மும்பை
உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல்
செய்திருந்தார்.
அந்தக்
குற்றவாளியின் மேல் முறையீட்டு மனு கடந்த
2009-ஆம் ஆண்டிலிருந்து
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது.
முக்கியப்
பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்பதால், அவர்களது
மேல் முறையீட்டு
மனுக்கள் விரைவாக
விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாக அவர், தனது
மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆனால்,
சல்மான் கான்
வழக்கு விசாரணையில்
தலையிடுவதற்கு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு
எந்தவிதமான உரிமையும் இல்லை எனக் கூறி
அந்த மனுவை
நீதிபதி நிராகரித்தார்.
நடிகர்
சல்மான் கானுக்கு
ஆதரவாக மும்பை
பொலிஸாரும்,
மாநில அரசு
நிர்வாகமும் செயல்படுவதால் சல்மான்கானின்
மேல் முறையீட்டு
மனு மீதான
விசாரணையை மும்பை
உயர் நீதிமன்றத்திலிருந்து
வேறு மாநிலத்துக்கு
மாற்றக் கோரி
தாக்கல் செய்யப்பட்ட
மனுவை உச்ச
நீதிமன்றம் நிராகரித்தது.
மும்பை
உயர் நீதிமன்றத்தில்
விசாரணை நடைபெற்றால்,
வழக்கில் தொடர்புடைய
முக்கிய ஆதாரங்கள்
அழிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த
மனு, விசாரணைக்கு
ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
எச்.எல்.
தத்து தலைமையிலான
அமர்வு, வழக்கு
விசாரணையை வேறு
நீதிமன்றத்துக்கு மாற்ற இயலாது எனக் கூறி
மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர்.
இந்நிலையில்,
சல்மான் கான்
குடிபோதையில் பாந்த்ரா பகுதியில் சாலையோரத்தில் தூங்கிக்
கொண்டிருந்தவர்கள் மீது காரை
ஏற்றி விபத்து
ஏற்படுத்தியதற்கான போதிய ஆதாரங்களை
அரசு தரப்பு
நிரூபிக்க தவறிவிட்டதாக
சல்மானுக்கு எதிராக அரச தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
சந்தேகத்தின்பேரில் அவருக்கு தண்டனை அளிக்க முடியாது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான
ரவீந்திர பாட்டிலின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. என்று தெரிவித்து இந்த
வழக்கில் இருந்து அவரை விடுவித்து நீதிபதி ஜோஷி தீர்ப்பு அளித்துள்ளார் .
0 comments:
Post a Comment