மர்ஹூம் மசூர் மௌலானாவின் நல்லடக்கத்தில் 

கலந்து கொள்ளாதது ஏன்?

கவலையை வெளியிட்டு காரணத்தையும் தெரிவித்துள்ளார்

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்

எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ள கிழக்கின் அரசியல் தந்தை மர்ஹூம் மசூர் மௌலானாவின் நல்லடக்கம் அன்னாரின் சொந்த ஊரான மருதமுனையில் இடம்பெற்றது. இதில் என்னால் கலந்துகொள்ள முடியாமையையிட்டு கவலையடைகின்றேன் என பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
மௌலானாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளமுடியாமல் விட்டதற்கான காரணத்தை அவர் தெரிவிக்குகையில்,
விளையாட்டுத்துறை அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் கடந்த 5 ஆம் திகதி சனிக்கிமை பாராளுமன்றத்தில் இருந்தமையினால் இதில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில் இவ்விவாத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் பாராளுமன்றம் வரவேண்டியிருந்ததால் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
இருந்த போதிலும் நான் கல்முனையில் இருந்த வேளை, அன்னாரின் ஜனாஸா கொழும்பிலிருந்து மருதமுனை வரும் வரை கார்த்திருந்து ஜனாஸாவைப் பார்த்துவிட்டு அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்து விட்டு வந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் அன்னாரது சொந்த ஊரான மருதமுனையில் நடைபெற்றது. இந்நல்லடக்கத்தில் அவர் சார்ந்த மற்றும் அவரது நேசத்திற்குரிய கட்சிகளின் பிரமுகர்களைக் காணவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என இணயத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
கனவொன்று நிறைவேறாத ஒரு ஆத்மா - ஆம் அதுதான் அவர் பாராளுமன்றம் போகும் ஆசை , கடைசி வரை நிறைவேறவே இல்லை .அதை நிறை வேற்றுவோர் இருந்தும் நிறை வேற்றாதவர்கள் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கத்திலாவது கலந்து கொள்ளாமல் விட்டது மௌலானாவின் குடும்பத்தினருக்கும் ஊரவர்களுக்கும் அன்னாரின் அபிமானிகளுக்கும்  ஒரு ஏமாற்றமாகப் போய்விட்டதாப் பேசப்படுகின்றது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பிட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்..எம்.மன்சூர்-மாகாணசபை உறுப்பினர் .எல்.எம்.மாஹிர், றஹ்மத் மன்சூர்  மற்றும்  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை ஆகியோருடன் சில உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் மட்டுமே ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்
அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் பலர் மௌலானா சார்ந்த கட்சியைச் சார்ந்திருந்தும் அவர்களைக் காணாமல் மௌலானாவின் குடும்பத்தினரும் ஊரவர்களும் ஏமாந்து போயினர்

தமது கட்சியைச் சேர்ந்த தலைவரோ செயலாளரோ தவிசாளரோ கலந்து கொள்ளாத இவ்விடயம் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top