புலம்புகிறது.......
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி
கல்முனை ஸாஹிறா என்ற எனது நாமத்தை வைத்து இலங்கையின் தலை நகரில் விழாக்களும் வைபவங்களும் நடத்தப்படுகின்றன. பழைய மாணவர் என்றும் இப்தார் என்றும் என் பெயரால் ஆடம்பரமான இடங்களில் ஒன்று கூடுகின்றனர். டிப்டொப்பாக கோர்ட் சூட் அணிந்து டாம்பிகமாகப் படம் எடுத்துகொள்கின்றனர். எனது பெயரைக்கூறி முதலாவது வைத்தியர், முதலாவது பொறியிலாளர் என்றும் பெருமை தேடிக்கொள்கின்றனர். என் பெயருடன் வருடத்தையும் சேர்த்து T சேட் அடித்தும் தண்ணீர் குவளைகளில் (JUG) எனது பெயரைப் பொறித்தும் ஆங்காங்கே புகழாரம் சூடுகின்றனர்.
ஆனால், என்னைப்பற்றியும் எனது தற்கால நிலை பற்றியும் எனது எதிர்காலம் பற்றியும் சிந்திப்பார்களோ இல்லை 1949 முதல் இன்றுவரைபல்லாயிரம் பட்டதாரிகளை பதம் பார்த்து புடம் போட்டு பாரினிலே படரவிட்டேன். பார்க்கும் இடம் எல்லாம் பட்டதாரி நான் படித்ததெல்லாம் கல்முனை ஸாகிறாவில்தான் என்று மார்தட்டி கொள்கிறார்கள்.எனது இடத்திலிருந்து உருவாகிய எனது பிள்ளைகள்.
நான் இங்கு சாக்கடையின் பிறப்பிடம்போல் சாக்கடையாயுள்ளேன். சிறிது மழை பெய்துவிட்டாலும் எங்கிருந்தோ தண்ணீரெல்லாம் என்னை நோக்கி ஓடிவந்து என்னை அசிங்கப்படுத்துகிறது. சில வேளை தண்ணீர் அதிகளவு நிறைந்துவிட்டால் தற்போதுள்ள எனது பிள்ளைகளின் கல்விக்கு கட், என்னை மூடி பிள்ளைகளுக்கு லீவு வழங்க வேண்டியிருக்கிறது. அநாதையாக நான் அழகிழந்து வருவதை சரியாகக் கவனித்து நடவடிக்கை எடுப்பாரில்லை.
என்னைப் சீராகப் பராமரிப்பதற்கு. நிரந்தரமான அதிபர் ஒருவர் இல்லை,எனது பிள்ளைகளுக்கு தொழில் நுட்ப பாடங்கள் சரியாகவும் முறையாகவும் கற்பிக்கப்படுவதாக இல்லை. எனது பிள்ளைகள் பாடம் சம்மந்தமாக சந்தேகங்கள் ஏற்பட்டு ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினால் மெத்தப்படித்தவன் என்று கூறி விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.
பிரதியமைச்சா் எச்.எம். ஹரீஸினால் ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்காக கடந்த வாரம் அம்பாறை கச்சேரியில் உள்ள திட்டமிடப்பணிப்பாளரைச் சந்தித்து இக்கட்டடித்திற்கான நிதியை டிசம்பா் 31க்கு முன் பெற சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என அதிபர் கூறுகின்றார். ஆனால் அக்கட்டடம் நிர்மாணிக்கப்படவிருக்கும் இடத்தில் அயலிலுள்ள மழை நீரெல்லாம் ஓடி வரும் வடிகான் ஒன்று இருக்கின்றது. அது வேறு திசையில் திருப்பப்படல் வேண்டும்.
2015 உயா்தரம் பெறுபேறுகளின்படி இரண்டு பொறியியலாளா், பல்கலைக்கழகம் செல்கின்றனா். 2014 ஆம் ஆண்டில் 7 பொறியியலாளா் 1 வைத்தியரும் பல்கலைக்கழகம் சென்றனா். என்று அதிபர் கூறுகின்றார். ஆனால் எனது பிள்ளைகளோ பிரத்தியேக வகுப்புகள் இல்லாவிட்டால் எங்களால் பரீட்சைகளில் சிறப்பாக சித்தியடைய முடியாது என்கின்றனர்.
எனது வளாகத்தில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாசலின் தரை ஓடுகள், முறையற்ற விதத்தில் பொருத்தப்பட்டதன் காரணமாக, அவற்றில் பெரும்பாலான தரை ஓடுகள் கழண்ட வண்ணம் உள்ளன. இவற்றில் சில தரை ஓடுகள் உடைந்தும் காணப்படுகின்றன.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசலானது இவ்வாறு காணப்படுவதால், இதைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தொழுகையில் ஈடுபடுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர்.
நன்மை கருதி மக்களால் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட பணம் சரியாகப் பாவிக்கப்படாமல் இவ்வாறு முறையற்ற விதத்தில் கருமமாற்றி வீணடிக்கப்பட்டிருக்கிறதே என்பதும் எனது கவலையாகும்.
1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி கேட்முதலியார் எம்.எஸ் காரியப்பரின் 5 ஏக்கர் காணியில் அன்னாரின் பிரசன்னத்துடன் அன்னாரால் நான் ஸ்தாபிக்கப்பட்டேன். மர்ஹும் கேட்முதலியார் எம்.எஸ். காரியப்பர் எனது ஸ்தாபகர் என்ற கௌரவத்தையும், சிறப்பையும் வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தையும் பதித்துச் சென்றுள்ளார்.
மர்ஹும் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் எவ்வாறு வகிபங்கு வகித்தாரோ அவ்வாறே எனது வளர்ச்சிக்கு அன்னாரின் மருமகனான முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆர். மன்சூரின் அளப்பெரிய சேவைகள் வகிபங்கு வகித்துள்ளது.
1977 ஆம் ஆண்டில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்ப்பட்ட முன்னாள் அமைச்சர் மன்சூர் 1994ஆம் ஆண்டு வரை கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது மாத்திரமின்றி அமைச்சரவை அமைச்சாராவுமிருந்து எனது வளர்ச்சிக்கு அரும்பெருந் தொன்றுகளைச் செய்துள்ளார்.
1985ஆம் ஆண்டுக்கும் 1989ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட நான்கு ஆண்டு காலப்பகுதியில் முன்னாள அமைச்;சர் மன்சூர் எனது பௌதிக வள மற்றும் மனித வள அபிவிருத்திக்காக பல்வேறு பணிகளைப் புரிந்துள்ளார். உயர்தர மாணவர்களுக்கான இரு மாடி விஞ்ஞான ஆய்வு கூடம், எம்.எஸ். காரியப்பர் கேட்போர் கூடம், விடுதி, வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டு மைதான விஸ்தரிப்பு, மீன்தொட்டி என பல்வேறு பௌதிக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், விஞ்ஞான பட்டதாரி ஆசரியர்களின் தேவை கருதி ஒரே நாளில் 7 விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களையும், ஏனைய பாடவிடயங்களுக்கான ஆசிரியர்களையும் எனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக நியமித்துக் கொடுத்த பெருமையும் தேசிய பாடசாலையாக ஆக்கிய பெருமையும் முன்னாள் அமைச்சர் மன்சூரையே சாரும்.
கல்முனைப் பிரதேச மக்களின் கல்விக்கான கலங்கரை விளக்காக திகழ்ந்த கேட்முதலியார் எம்.எஸ் காரியப்பர் எனது (ஸாகிறாவின்) வராற்றில் மட்டுமல்ல கல்முனையின் வரலாற்றிலும் மறக்கப்பட முடியாத மா மனிதராவார். அவரோடு இக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஒத்துழைத்த ஏ.ஆர்.மன்சூர், எம்.ஸி.அஹமது, எம்.எச்.எம் அஷ்ரஃப், பேரியல் அஷ்ரஃப், எச்.எம்.எம்.ஹரீஸ் அனைவருமே வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர்கள்தான் இப்படியாக உங்களின் கல்வி வளர்ச்சிக்கும் உயர்ந்த அந்தஸ்துக்கும் என் மூலம் வளர்ந்து வரக் காரணமானவர்களையும் மறந்து கொண்டிருப்பதும் எனக்கு கவலையாகும். இது போன்று என்னை பராமரித்த ஆரம்பகால அதிபர்களும் மறக்கடிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களும் நினைவு கூரப்படல் வேண்டும் என்பதே எனது விருப்பம்.
என்னைப் பராமரித்த ஆரம்பகால அதிபர்களில் சிலர்,
அதிபர் பெயர்
|
தொடக்கம்
|
வரை
|
எம்.ஐ.அப்துல் காதர்
|
16.11.1949
|
23.07.1950
|
எம்.எம்.இப்றாஹீம்
|
24.07.1950
|
06.08.1950
|
ஆர்.பொன்னப்பா
|
07.08.1950
|
31.12.1950
|
எம்.ஐ.எம்.மீராலெவ்வை
|
01.01.1951
|
31.12.1956
|
கே.எல்.சின்னலெவ்வை
|
01.01.1957
|
12.02.1960
|
ஏ.எம்.மஜீத்
|
15.02.1960
|
20.06.1961
|
எம்.எம்.இப்றாஹீம்
|
21.06.1961
|
31.12.1961
|
பி.ஜி.என்.சரிபுதீன்
|
01.01.1962
|
31.12.1962
|
ஜே.எம்.அப்துல் காதர்
|
01.01.1963
|
30.03.1964
|
கே.எம்.அபூபக்கர்
|
01.04.1964
|
15.10.1966
|
எஸ்.எச்.எம்.ஜெமீல்
|
16.10.1966
04.03.1975
|
31.01.1971
25.101979
|
எம்.ஐ.ஜுனைதீன்
|
01.02.1971
17.08.1971
|
08.06.1971
03.03.1972
|
ஏ.ஆர்.ஏ.அஸீஸ்
|
07.03.1972
|
30.10.1972
|
கே.எல்.அபூபக்கர்லெவ்வை
|
01.11.1972
|
30.03.1975
|
எம்.எம்.எம்.இப்றாஹீம்
|
26.10.1979
|
31.01.1985
|
எம்.சீ.ஆதம்பாவா
|
01.02.1985
|
15.10.1989
|
ஏ.எம்.ஹுஸைன்
|
16.10.1989
|
21.04.1999
|
உங்களை நாடறியவைத்த என்னை ஓரக்கண் கொண்டாவது பாருங்கள்! எனது அபிவிருத்தி குறித்தும் எனது பிள்ளைகளின் கல்வி குறைபாடுகள் பற்றியும் சற்று சிந்தியுங்கள்!!
என்னை பராமரித்த அதிபர்களையும் உங்கள் விழாக்களிலும் வைபவங்களிலும் நினைவு கூருங்கள்!!! இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
உங்களை ஒரு அந்தஸ்துக்கு உருவாக்கிய,
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி.
0 comments:
Post a Comment