அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்தியாலும்
எமது பேராளர் மாநாட்டை தடுக்க முடியாது
- பிரதி அமைச்சர் அமீர் அலி
எமது
கட்சி 53.000 வாக்குகள் பெற்ற குருநாகல் மாவட்டத்தில்
அகில இலங்கை
மக்கள் காங்கிரசின்
பேராளர் மாநாட்டை
திட்டமிட்டபடி நாளை 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
நடத்தவுள்ளதாக பிரதி அமைச்சர்
அமீர் அலி
தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் தெரிவித்ததாவது
பேராளர்
மாநாட்டிற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெறுகிறது. கட்சியின்
போராளிகள் நாட்டின்
சகல பிரதேசங்களில்
இருந்துவந்து கலந்து கொள்வார்கள்.
எமது
கட்சிக்கு துரோகம்
செய்தவர்களின் அறிக்கைக்கு அல்லது மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களின்
குதர்க்கங்களுக்கு இல்லையேல் எமது
கட்சியின் தலைமையின்
உத்தரவை மீறிச்
செயற்பட்டவர்களுக்கு பதில் வழங்கிக்
கொண்டிருக்க நாம் தயாரில்லை.
உரிய
முறைப்படி எமது
கட்சி மாநாடு
நடைபெறுகிறது. கட்சியின் தவிசாளர் என்றவகையில் இதை
நான் பொறுப்புடன்
சொல்கிறேன். அல்லஹ்வைத் தவிர வேறு எந்த
சக்தியாலும் எமது போராளர் மாநாட்டை தடுத்துநிறுத்த
முடியாது.
கடந்த
பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி குருநாகல்
மாவட்டத்தில் 53.000 ஆயிரம் வாக்குகளை
பெற்றது. இந்நிலையில்
நாம் மறைமுகமாக
இந்த பேராளர்
மாநாட்டை நடத்தவில்லை.
முழுநாட்டிலும் எமது கட்சிக்கு ஆதரவும்: செல்வாக்கும்
உள்ளது. அந்தவகையில்
குருநாகல் மாவட்டத்தை
தெரிவுசெய்தோம். இவ்வாறு
பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.