கல்முனை மாநகர சபையின் தற்போதுள்ள கடமை
குப்பைகளை
அகற்றி சுற்றாடலை பாதுகாக்க வேண்டியதே
சமூக ஆர்வலர்கள் கருத்து
பிரதேசங்களில் நாளாந்தம் நிறையும் குப்பைகளை அகற்றி மக்களின் சுற்றாடலை பாதுகாப்பதுடன் பிரதேசத்தை சுத்தமாக வைத்திருந்து மக்களின் உடல்
நலத்திற்கு உதவுவதே கல்முனை மாநகர சபையின் தற்போதுள்ள முக்கிய கடமையாகும் என சமூக ஆர்வலர்கள்
மற்றும் தமிழ்,முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழுள்ள தமிழ்
முஸ்லிம் பிரதேசங்களில் நாளாந்தம் குப்பைகளை
அகற்றி பிரதேசத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகம் இதுவரை ஒரு சீரான திட்டம்
வகுத்து செயல்படாதது குறித்தே சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்,முஸ்லிம்
புத்திஜீவிகள் இக்கருத்தை கவலையுடன் வெளியிட்டு வருகின்றனர்.
மக்களின் பிரதிநிதிகளாக மாநகர சபையில் இருந்து
கொண்டிருப்பவர்கள் மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது
கடமையும் அவசியமுமாகும் எனக் கூறும்
சமூக ஆர்வலர்கள். கல்முனை மாநகர சபையால் கல்முனை அபிவிருத்தி தொடர்பாக பல நாடுகளுடன்
ஒப்பந்தங்கள் செய்துள்ளாதாக மக்களுக்கு கூறப்படுகின்றதே தவிர இதுவரை எந்த ஒரு நாட்டின்
உதவி பெற்ற அபிவிருத்தி செயல்பாடுகளைக் காணக்கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
கல்முனைப் பிரதேசத்தில் நிறையும் குப்பைகளை நாளாந்தம்
அகற்றுவதற்கு சீரான திட்டங்களை வகுத்து செயல்படுத்த முடியாத கல்முனை மாநகர சபை
நிர்வாகம் வேறு எந்த திட்டங்களை வகுத்து சீராக நடத்தப் போகின்றார்கள்? என்று
மக்கள் கிண்டலாகக் கேள்விகளையும் எழுப்புகின்றனர்.
கல்முனை மாநகர சபை எந்த ஒரு திடடத்தையும் வகுத்து நடை முறைப்படுத்தாவிட்டாலும்
பரவாயில்லை கல்முனை மாநகர
சபை நிர்வாகத்தின் கீழுள்ள தமிழ் முஸ்லிம்
பிரதேசங்களில் நாளாந்தம் நிறையும் குப்பைகளை
அகற்றி மக்களின் சுற்றாடலை பாதுகாப்பதுடன் பிரதேசத்தை சுத்தமாக வைத்திருந்து மக்களின் உடல்
நலத்திற்கு உதவுவதே தற்போதுள்ள முக்கிய கடமையாகும். மக்கள் சுகாதாரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் அபிவிருத்தி பற்றி எவராலும் சிந்திக்க முடியும் என்பதே மக்கள் விருப்பமாகும்.
0 comments:
Post a Comment