பாதுகாப்பு அதிகாரிகளிடம்
முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்
சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறனும் இருக்க வேண்டும்
- இங்கிலாந்து
பிரதமர் கேமரூன்
பாதுகாப்பு அதிகாரிகளிடம் முஸ்லிம் பெண்கள் தங்கள் புர்காவை விலக்கி முகம் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
பிபிசியின் ரேடியோ 4-க்கு அளித்த பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறும்போது, "முஸ்லிம் பெண்கள் புர்காவை விலக்கி, தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உதவி புரிய வேண்டும். தீவிரவாதத்தை சமாளிக்கும் நமது முயற்சிக்கு நீங்கள் உதவி புரிய வேண்டும்.
நீதிமன்றங்கள், குடியேற்ற சோதனை மையங்கள் போன்ற இடங்களில் இதனைக் கடைபிடியுங்கள். மேலும், இங்கிலாந்து உள்ள முஸ்லிம் பெண்கள் அவர்கள் விரும்பும் ஆடையை சுதந்திரமாக அணியலாம். ஆடை சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது" என்றார்
முன்னதாக, இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக 28 மில்லியன் டாலருக்கு அதிக நிதி ஒதுக்குவதாக அதன் அரசு தெரிவித்தது.
அவர்களுக்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாய மையங்களில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்படும். அதில் அவர்கள் கற்றுத் தேர்வு பெறலாம். அவர்களின் ஆங்கில திறமை அறிய 2½ ஆண்டுகளில் பரீட்சை நடத்தப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’’ என பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள 1,90,000 முஸ்லிம் பெண்கள் ஆங்கில மொழி அறிவில் குறைந்த அளவோ அல்லது தெரியாமலோ உள்ளார்கள் என அந்நாட்டு அரசு புள்ளி விவரங்கள் கூறுகிறது.
ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளாத முஸ்லிம் பெண்களுக்கான குடியிரிமையை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளதும் கவனிக்கத்தகக்து.
0 comments:
Post a Comment