குமார் குணரத்தினத்தின்
விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பொலிஸார்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரைப் பிரயோகம்
முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி, அக்கட்சியினர், கொழும்பு கோட்டையில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சியடித்துள்ளனர்.
கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்தே, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரத்தினத்தின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் இந்த பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு தொழில்நுட்ப கல்லூரி சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டமானது, அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கும் ஆயத்தமானது..
0 comments:
Post a Comment