ஐக்கிய தேசியக் கட்சி தேசியப்பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் ராஜிநாமா
முஸ்லிம் காங்கிரஸின் ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சகோதரர் டாக்டர்
ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் தனது நாடாளுமன்ற பதவியை இன்று இராஜிநாமாச் செய்துள்ளார் என
அறிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கு
இணங்கவே அவர் இராஜிநாமாச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெற்றிடமாகியுள்ள இவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எந்தப் பிரதேசத்திற்கு வழங்கப்படப்
போகின்றது அது யாராக இருக்கப் போகின்றார்? அது வழமை போன்று பழைய முகமா? இல்லை புதிய
முகமா? திருகோணமலை மாவட்டமா? மட்டக்களப்பு மாவட்டமா? இல்லை அம்பாறை மாவட்டமா? என்ற
கேள்வியும் எதிர்பார்ப்பும் கட்சிப் போராளிகளிடம் தற்போது ஆவலாக எழும்பியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீம் இதற்கான பதிலை எவ்வாறு வழங்கவுள்ளார் என்பதை சற்று
பொறுத்திருந்துதான் கட்சிப் போராளிகளால் கண்டு கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment