பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இன்று சுவிட்சர்லாந்து
விஜயம்
பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
இன்று உத்தியோக
பூர்வ விஜயமொன்றை
மேற்கொண்டு சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார்.
சர்வதேச
பொருளாதார மாநாட்டில்
கலந்துகொள்ளும் நோக்கில் பிரதமர் இந்த விஜயத்தினை
மேற்கொள்ளவுள்ளார்.இந்த விஜயத்தில்
நிதி அமைச்சர்
ரவி கருணாநாயக்க
மற்றும் சர்வதேச
வர்த்தக விவகார
அமைச்சர் மலிக்
சமரவிக்ரம ஆகியோரும்
இணைந்துகொள்ளவுள்ளனர்.
எதிர்வரும்
20ஆம் திகதி
ஆரம்பமாகும் இந்த மாநாடு 23ஆம் திகதி
வரை இடம்பெறவுள்ளது.
அத்துடன்,
இந்த மாநாட்டில்
கலந்துகொள்வதற்காக 40 நாட்டுகளினுடைய 2500க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள்
மற்றும் பொருளாதார
வல்லுனர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த
நிலையில், குறித்த
மாநாட்டில் உலகின் சிறந்த வர்த்தக நிறுவனங்களின்
தலைவர்களான மாரிபாரா, பெசன்பாரோட், சத்யாநடேல்லா உள்ளிட்ட
பலரும் கலந்துக்கொள்ளவிருக்கின்றனர்.
இதேவேளை,
இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு விசேட
அழைப்பிதல் கிடைக்கப்பெற்று சர்வதேச பொருளாதார மாநாடு
ஒன்றிற்கு செல்கின்றமை
இது முதல்
சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment