மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவராக ஜெமீல்
சாய்ந்தமருது மத்திய குழு பாராட்டு!
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவரான ஏ.எம்.ஜெமீல் அவர்கள் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் பிரதித் தலைவராக (Deputy Leader) நேற்று (2016.01.17) குருநாகலில்
இடம் பெற்ற
கட்சியின் பேராளர்
மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டார்.
ஏ.எம்.ஜெமீல்
அவர்கள் இவ்வாறு அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறித்து கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு தேசியத் தலைவர் அமைச்சர்
றிஷாத் பதியுதீனுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு மேலும் தெரிவித்திருப்பதாவது,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைமையானது கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்களித்த
கட்சியின் 33000 போராளிகளையும் கல்முனைத் தொகுதியையும் குறிப்பாக
சாய்ந்தமருது மக்களையும் கெளரவப்படுத்தி நேற்றைய
தினம் குருநாகலில்
இடம்பெற்ற பேராளர்
மாநாட்டில் முன்னாள் மாகான சபை உறுப்பினர்
ஏ.எம்.ஜெமீல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரதி
தலைமை பதவியானது
மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
இந்நியமனம் தொடர்பில் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது
மத்திய குழு
தேசியத் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும் கட்சியின் உயர்பீட
உறுப்பினர்களுக்கும் நன்றியினையும்
பாராட்டையும் தெரிவிக்கிறது.
ஏற்கனவே கட்சியின் தலமைத்துவமானது
சகோதரர் கலாநிதி
ஜெமீலுக்கு அமைச்சின் கீழ் உள்ள மிகவும்
முக்கிய நிறுவனமான
அரச வர்த்தக
கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக நியமித்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்
நேற்று (2016.01.17) இடம் பெற்ற கட்சியின்
பேராளர் மாநாட்டின்
போது கட்சியின்
உயர் பதவியான
பிரதித் தலைவர்
(Deputy Leader) பதவியையும் கொடுத்தமையையிட்டு எமது அம்பாறை மாவட்ட போராளிகள்
சார்பாகவும், சாய்ந்தமருது மத்திய குழு சார்பாகவும்
மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தெரிவித்துள்ளது
0 comments:
Post a Comment