முக்கிய விடயங்கள் குறித்து முடிவுகளை
எடுப்பதற்காக
ஐ.தே.க
மத்திய செயற்குழு இன்று பிற்பகல் கூடுகிறது!
ஐக்கிய
தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடுகின்றது. இக்கூட்டத்தில் முக்கிய
பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய
தேசிய முன்னணி தொடர்பிலான யாப்பிற்கான ஆலோசனை கோரல், கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு
முக்கிய விடயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில்
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
கட்சியின்
மத்திய செயற்குழு, கட்சித் தலைமையகமான சிறிகொத்த ஆகியனவற்றை மறுசீரமைப்பதற்கான யோசனைகளும்
இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை,
வெற்றிடமாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு
யாரை தெரிவது என்பது குறித்து இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது

0 comments:
Post a Comment